மழைக் கால அதிகாலைப் பொழுது அவசரமின்றிப் புலர காத்திருந்தது. புள்ளினங்களின் கீச்சிடல் மென்மையாய் செவியை நிறைக்க, மெல்ல புரண்டு படுக்க முயன்றாள் பார்கவி. பார்த்திபனின் கரம் அவளின் இடையில் அழுத்தமாகப் பதிந்திருக்க, அவளின் அசைவில் அவனது உறக்கம் கலைந்தது.
“தூங்கலையா நீ? தூங்கு பாரு” என்று அவளை இன்னும் நெருக்கமாக இழுத்து அணைத்துக் கொண்டான்.
“நான் குளிக்கணும், விடுங்க” என்று கிசுகிசுத்தாள். அவன் கையை விலக்கி விட அவள் முனைய, வீம்புக்கென்று அவள் இடையை அழுந்தப் பற்றினான்.
“ஷ்ஷ்ஷ் பார்த்தி”
“நைட்டெல்லாம் என்னை இப்படித்தான் அதட்டிட்டு இருந்த, இப்பவுமா?”
லேசாகத் தலையை உயர்த்தி, “அதட்டினேனா?” என்று விழிகளை விரித்துக் கேட்டாள் அவள்.
“ம்ம், இதோ இப்போ என்னை முறைச்சு முறைச்சு பார்க்குதே இந்தக் கண்ணு. இது கூட நைட் என்னை மிரட்டுச்சு தெரியுமா?” தாடையை உயர்த்தி அவளின் வலப்பக்க விழியில் முத்தமிட்டான். சட்டென அவள் விழிகள் மூட, “அப்பப்போ இப்படி மயங்குச்சுத்தான். ஆனாலும் மிரட்டுனதுதான் அதிகம்” என்று புகார் படித்தான்.
“நான் மிரட்டி நீங்க பயந்தீங்க? ம்ம்ம்? ஏதாவது நம்புற மாதிரி சொல்றீங்களா புளுகுனி பார்த்தி”
“ஏய் என்னைப் போய்ப் பொய் சொல்றேன்னு சொல்றியா? இட்ஸ் மென் திங்க், உனக்குப் புரியாது.”
“அப்படிங்களா?” என்று கேட்டவளின் உதடுகள் குறும்பாக வளைய, எட்டி மென்மையாய் பட்டாம்பூச்சியின் தொடுகை போல அவள் இதழில் முத்தமிட்டான்.
“என்ன அப்படிங்களா? என் ஹார்ட் பீட்ட ஃபீல் பண்ணதானே நீ? அது எட்டு கிலோ மீட்டர் ஓடுன மாதிரி தாறுமாறத் துடிச்சதுதானே? அதைப் பயம் பதட்டம்னு சொல்லவா இல்ல.. ம்ம், அது நான் உன்னை எந்த விதத்திலும் காயப்படுத்திட கூடாதுங்கற பயம். நம்ம ரெண்டு பேருக்குமே நாம, அப்புறம் நம்மளோட இந்த நெருக்கம், நம்ம..” என்று அவளின் மேனியை கண்களால் வருடி, “இது எல்லாமே புதுசு. புரியுதா? உன்னை இப்படிப் பார்க்கும் போதே எனக்குப் போதையாகுது. சட்டுன்னு மூளைக்குள்ள நடக்குற இயற்பியல் வேதியியல் மாற்றம் என்னை முரடன் ஆக்கிடுமோன்னு பயந்துட்டேன். அப்படி இல்லதானே?” என்று அவளின் கண் பார்த்து, மெய்யான கரிசனத்துடன் கேட்டான்.
“இதையே எத்தன தடவ கேட்பீங்க பார்த்தி? இல்லன்னு நைட் சொன்ன பதில்தான் இப்பவும்” அவன் மார்பில் விரல் பதித்து வருடி சொன்னாள்.
அவன் அழுத்தமாக அவளையே பார்க்க, “நீங்க முரட்டுத்தனமாலாம் என்கிட்ட நடக்கல” என்று முணுமுணுத்தவள், அவன் மார்பின் ரோமத்தில் கை நுழைத்து வருடி இழுத்திருந்தாள்.
அவள் விரல்களைக் கோர்த்து தடுத்து அவன் பிடிக்க, “நீங்க எப்படி நடந்துக்கிட்டாலும்.. நடந்திருந்தாலும்.. எனக்கு…” அவன் பார்வையில் சொல்ல வந்ததை முடிக்க முடியாமல் உதடு கடித்தாள்.
“ஏய்.. உனக்கு.. உனக்கு? சொல்லி முடி பாரு”
“யூ கேன் ஃபில் இட் அப் பார்த்தி. என்ன வார்த்தை வேணாலும் போட்டு.. அதை முடிச்சுக்கோங்க” என்றாள்.
“அப்போ அப்போ..” என்று அவன் இழுக்க, “உங்கள…” என்று அவள் விரல்கள் கோர்த்திருந்த அவன் உள்ளங்கையை நகம் கொண்டு கீறினாள்.
“பாரு பாருன்னு பைத்தியம் பிடிச்சவன் மாதிரி நான் பினாத்தினாலும் கேட்காம என் முதுகு முழுக்க நகத்தால ஓவியம் வரைஞ்சு வச்சிருக்க நீ” என்று பொய்யாய் புகார் படித்தான்.
“சாரி..” என்றாள் கண்களைச் சுருக்கி.
“அச்சோ பாரு பாப்பா. அதெல்லாம் நீ எனக்குத் தந்த பாராட்டு..” பட்டென்று அவன் வாயை மூடினாள். அவள் விழிகள் விரிந்து அவனைக் கண்டனத்துடன் முறைக்க, “பெருமையாதான் சொல்றேன் பாரு. இதுக்குச் சாரி சொன்னா..” என்று குறும்பாக அவளைப் பார்த்து புன்னகைத்து, கண் சிமிட்டி, அவளின் உள்ளங்கைகளுக்குள் முணுமுணுத்தான்.
அவனது பேச்சும், பார்வையும் பாவையை வெட்கம் கொள்ளச் செய்தது. அவள் உள்ளங்கையில் அவனின் உதடும் மீசையும் உரசிட கூச்சத்தில் கையை விலக்கி அவனிடமிருந்து விலகப் போனாள்.
அவளை விலக விடாமல் இறுக்கி பிடித்தான்.
“விடுங்க பார்த்தி, விடிஞ்சுருச்சு. நான் குளிக்கப் போறேன்”
“என் கேள்விக்கு நீ இன்னும் பதில் சொல்லல பாரு”
மெல்ல கண்களைச் சுருக்கி, “எந்தக் கேள்விக்கு?” என்று கேட்டாள்.
“முரடனா நடந்துக்கிட்டேனா? ஐ மீன் முரட்டுத்தனமா?”
மறுப்பாகத் தலையசைத்து, “ம்ஹும்” என்றாள்.
“ம்ஹும்னா? உன்னை ஹர்ட் பண்ணிட்டேனா பாரு?” கணத்தில் அவன் கண்களில் கலவரம் கூட, அவளின் கழுத்துக்குக் கீழே அவன் பார்வை பாய, பட்டென்று போர்வையை உருவினான். பார்கவி பதறி போர்வையைப் பற்றி அவனை முறைத்தாள்.
“பார்க்க விடு பாரு”
“பார்த்…தி” தன் கையைக் கவனமாக உயர்த்தி அவன் கன்னத்தில் பதித்தாள். அதன் குளுமை அவன் கன்னம் உணர, உதட்டில் மெல்லிய முறுவல் உண்டானது.
“உன்னை இப்படிப் பார்த்தா திரும்ப முரடன் ஆகணும் போல இருக்கு” என்றான் கரகரத்த குரலில்.
அவன் முதுகை வருடி, “இதெல்லாம் பாராட்டுன்னு சொன்னீங்கதானே? அப்போ நீங்க எப்படி என்னை ஹர்ட் பண்ணியிருக்க முடியும்?” என்று கேட்டாள்.
“ம்ம் பார்த்திக் கூடச் சேர்ந்து கொஞ்சம் பேச்சு வருது பாரு பாப்பாக்கு..” உடல் குலுங்க சிரித்துச் சொன்னான். அவன் குரலில் கரகரப்பு கூடி போக, முழுதாக அவளைப் புரட்டி போட்டு அவள் முகம் பார்த்தான்.
மெல்லிய வெளிச்சம் அறைக்குள் நுழைய, கூச்சம் கொண்டு கையை உயர்த்தி அவன் கண் மூடினாள். அதில் போர்வை லேசாக விலக, அவன் பார்வை அவளில் மோக மயக்கத்துடன் பதிந்தது.
அவனையே இழுத்தணைத்துத் தன்னை மறைத்தாள்.
“உடல் அணிந்த ஆடை போல் நீ எனை அணிந்து கொள்வாயா?” கரகரத்த குரலுக்குக் கவர்ச்சி கூடியிருந்தது.
“ம்ம்ம்”
“இந்த ம்ம்ம் மட்டும் இல்லன்னா நேத்து நைட் என் பாடு ரொம்ப மோசமாகி இருக்கும் பாரு.”
“அச்சோ..”
அவளின் வெட்கமெல்லாம் அவனுக்கு வெல்லமாகத் தித்தித்தது.
“லவ்ல மட்டுமில்ல பார்கவி, லஸ்ட்ல கூட வெயிட்டிங் பீரியட் இஸ் ஸ்வீட் தான் இல்லையா? அப்படி நாம வெயிட் பண்ணலன்னா இந்த மொமெண்ட் இவ்ளோ அழகா அமைஞ்சுருக்காது. ஐ ஃபீல் கம்ப்ளீட் நவ் பார்கவி. என்னோட பாதி என்னோடு சேர்ந்ததில்.. மனசு முழுக்க ஒரு மாதிரி.. அதெல்லாம் வார்த்தையில் சொல்ல முடியாது. பட் பீலிங் கம்ப்ளீட்.” அவளின் நெற்றியின் ஈரமாய் அழுத்தமாக இதழ் தடம் பதித்துச் சொன்னான்.
அவள் மேனியில் ஓடிய சிலிர்ப்பை அவன் உடல் உணர்ந்தது.
“எப்போ சொல்றான் பாருன்னுதானே பார்க்கற? எல்லாம் முடிஞ்ச பிறகு சொல்றேன்னு..” அவள் கண் பார்த்து குறும்பாக அவன் கேட்க, சிரித்து விட்டாள்.
அவளின் தலை கலைந்திருந்தது, கண்களில் உறக்கமும் சோர்வும் மிச்சமிருந்தன. ஆனாலும் அவள் முகத்தில் தனிப் பொலிவு தெரிந்தது. ஓவியன் மிகவும் கவனமாகக் கலைத்து போட்ட ஓவியம் போல் அவளிருக்க, பார்த்திபன் பார்வையில் காதல் பித்தேறியது.
அவன் கண்களை நேராக எதிர்கொண்டு, “ஐ லவ் யூ பார்த்திபன்” என்றாள். நொடியில் அவனிடம் அப்படியொரு மாற்றம்.
காதலை உச்சரித்த உதடுகளை உரிமையாக உன்மத்தம் கொண்டு முத்தமிட்டான்.
இரவில் இருந்த மென்மை மாறி ஆரம்பமே அதிரடியாக வன்மையில் தொடங்கினான்.
“பார்த்தி” அவளின் அழைப்பே அவனுக்குக் கட்டுப்பாட்டைத் தந்தது.
அவள் தாடையைப் பற்றி, “திரும்பச் சொல்லு” என்றான்.
“லவ் யூ பார்த்தி..”
“எப்போ சொல்ற பாரு? எப்போ வந்து சொல்ற?” காதல் மிகப் பிதற்றினான். அவனது வேகம் அவள் விழி மொழியில் கட்டுப்பட்டது. அவனது வன்மை அவளின் விரல் தொடுகையில் மென்மையானது.
அவளின் வெட்கத்தைக் கூச்சத்தை முத்தங்களால் வென்றான். முழுமையாக அவளிடம் தன்னை அர்ப்பணித்து, ஒப்படைத்து, முத்தங்களைப் பாராட்டாகப் பெற்றுக் கொண்டான்.
காதலின் வேகத்தில் வன்மையும், முரட்டுத்தனமும் தொலைந்து போக, காதல் கூடிட நிதானமும், மென்மையும் அவனின் ஒவ்வொரு செல்லிலும், செயலிலும் கூடியது.
அவளை ரசித்தான். தன்னை ரசிக்க வைத்தான். காதலை கூடலை இனிமையான இசையைப் போல இசைத்தான். இல்லறம் இனிமையானது.
அந்தக் அதிகாலைப் பொழுதை அவனது அன்பால் அழகாக்கினான்.
அவன் மேல் மல்லிகை வாசமாக அவள் வாசம் வீசியது. அவள் மேல் வியர்வையும், வாசனை திரவியமுமாக அவன் வாசம் வீசியது.
மோக மயக்கம் தீர்ந்த பின்னும் அவன் உதடுகள் அவள் முகமெங்கும் முத்தமிட்டு, கழுத்தோரம் அதிகமாகத் தேங்கியது. அங்கே தற்போது காயத்தின் வடுவே இல்லை. ஆனாலும் அவன் உதடுகள் கூடுதலாக அங்கே முத்த முகாமிட்டன.
மீண்டும் ஒருவருள் ஒருவர் உணர்ச்சி பெருக்கில் தொலைய, அச்சமயம் ஜன்னலை யாரோ தட்டும் சத்தத்தில் சட்டெனச் சுதாரித்துப் போர்வையை வேகமாக இருவருக்கும் சேர்த்துப் போர்த்தினான் அவன்.
“என்ன சவுண்டு அது?” அவன் குழப்பத்துடன் வினவ, பார்கவி சிரிக்கத் தொடங்கியிருந்தாள்.
அவளின் சிரிப்புச் சத்தத்திற்குச் சுருதி சேர்ப்பது போலத் தொடர்ந்து ஜன்னலை வேகமாக யாரோ தட்ட, அந்தச் சத்தமே வித்தியாசமாக இருந்தது.
“பாரு” என்றழைத்தான். அவளின் சிரிப்பு நிற்கவேயில்லை. இப்போது தட்டும் சத்தத்துடன் கீச்சிடல் வேறு கேட்க, “ஓ” என்றான் புரிதலுடன்.