உதய ராகம் – 15 (3)

அலைபேசியை எடுத்து கணவனை அழைத்தாள்.

“சொல்லு பட்டே” என்றான் சன்னக் குரலில், ஏதோ வேலையாக இருக்கிறான் என்று புரிந்தது.

“காவ்யா, ஷாப்பிங் பட்ஜெட் எவ்ளோ சொன்னீங்க அவகிட்ட?”

“என்ன உளரு…” என்று தொடங்கியவன், “என்ன..என்ன சொன்ன?” என்றான்.

“காவ்யா, ஜவுளி எடுக்க அமௌன்ட் எதுவும் குறிப்பிட்டு சொன்னீங்களா?”

“இல்லையே, ஏன் கேட்கற?”

“ஒன்னுமில்ல கேட்டேன். நீங்க வேலையைப் பாருங்க. அப்புறம் பேசுறேன்” அவன் பதில் பேசும் முன் தொடர்பை துண்டித்தாள்.

அன்றிரவு உறங்க செல்லும் முன், உதயிடம் அந்தக் கேள்வியைக் கேட்டாள் ராகவி.

“உதய்..”

அவன் மெல்லத் திரும்பி பார்க்க,

“காவ்யாவை நம்ம கடையில்…, காவ்யாவை இன்னைக்கு எவ்வளவுக்குத் துணி எடுக்கச் சொன்னீங்க?” கேள்வியைச் சரியாகக் கூடக் கேட்க முடியாமல் திணறினாள்.

“நான் எங்க துணி எடுக்கச் சொன்னேன்?”

“அவ நீங்க எடுத்துக்கச் சொன்ன மாதிரி தானே பேசினா…”

“ஆமா, ஆமா. நான் பே பண்றேன்னு சொல்லி இருந்தேன் பட்டே”

மௌனமாய் அவனைப் பார்த்தாள் ராகவி.

“உதய், நீங்க எப்போ காவ்யா கிட்ட பேசினீங்க?”

“நான், நான் இன்னைக்குக் காலைல பேசினேன் மா..”

“எப்போ? எத்தனை மணிக்கு? காலையில் என் கூடத் தானே இருந்தீங்க?”

“அது அது.. நீ குளிக்கும் போது…”

“சரி, போனை குடுங்க.”

“ராகவி…” அதட்டினான்.

“பொய் சொல்லா….” அவள் முடிக்கும் முன் படுக்கையில் இருந்து எழுந்து நின்றான்.

“இன்னைக்கு என்னைத் தூங்க விடுறதா இல்லையா நீ? என்ன பொய் சொல்றேன்னு சொல்ற? நான் எதுக்குப் பொய் சொல்லணும்?” புருவங்கள் நெரிய கோபத்துடன் கேட்டான்.

“உதய், அவ நாலே நாலு சேலை ஒன்றரை லட்ச ரூபாய்க்கு வாங்கி இருக்கா. அத்தனையும் விலை கூடின பட்டு. வருஷத்துல ஒரு முறை கூட அதைக் கட்ட மாட்டோம். கல்யாணம், வளைகாப்பு, காதுகுத்து இது போல விழாக்களுக்குக் கட்டுறது மாதிரி அதிகச் சரிகை வேலைப்பாடு இருக்கற சேலை. அவங்க வீட்ல இப்ப என்ன விசேஷம்னு இத்தனை சேலை வாங்கி…”

“உனக்கு எதுக்கு அந்தக் கவலை?” என்றான் எரிச்சலுடன்,

“அதுவும் சரி தான். ஆனா, ஒன்றரை லட்சம் உதய்” என்றாள்.

இன்னமும் அவளால் நம்பத் தான் முடியவில்லை. நாத்தனார் எதற்காக அவ்வளவு விலை கூடின சேலைகளை வாங்கினாள் என்று.

“லட்சம் தானே? சரி, அதுக்கு என்ன?”

“காசு நீங்க கொடுப்பீங்கன்னு இன்டேரக்டா சொல்லிட்டு, கையை வீசிட்டு போய்ட்டாங்க உதய்”

“என் கார்டில் இருந்து எடுத்துக்கோ ராகவி.” என்றான் அயர்வுடன்.

“பெரிய அறிவாளி மாதிரி பேசாதீங்க. இதோட நாலாவது முறை. அவங்க இது போலப் பண்றது. எல்லா முறையும் என்கிட்ட உங்க பேரை தான் சொல்றாங்க. நீங்களும் நான் கேட்கும் போதெல்லாம் உளறி, மழுப்பி, சமாளிச்சுட்டு இருக்கீங்க. அவங்களுக்கு என்ன தான் பிரச்சினை?” என்றாள் கேள்வியாக, உண்மையாக நாத்தனாரின் செயலுக்குப் பின்னான காரணம் அவளுக்கு விளங்கத் தானில்லை.

“தேவைப்படுது. வாங்கறா. இதுல என்ன இருக்கு ராகவி”

“உதய், நான் அதைச் சொல்லலை. நகை கடைக்கு வம்படியா என்னை இழுத்துட்டு போய்… அவ நகை செலக்ட் பண்ண ஹெல்ப் பண்ண சொல்லி.. கடைசியில் பில் வந்ததும் பார்த்தா, ஆளைக் காணோம். பொறுமையா ரெஸ்ட்ரூம் போய்ட்டு வந்து நின்னுட்டு. உதய் அண்ணா தான் வாங்கிக்கச் சொன்னாங்க அண்ணின்னு சொல்றா. அன்னைக்கு ஐம்பதினாயிரம். இன்னொரு நாள் சூப்பர் மார்கெட்டில்…”

“இப்ப உனக்கு என்ன பிரச்சினை அதைச் சொல்லு…” கடினமான குரலில் கேட்டான்.

“என்கிட்ட முன்னாடியே சொல்லி இருக்கணும் இல்ல நீங்க.” என்றாள் இறங்கி போன குரலில்.

“சரி, சொன்னா என்ன பண்ணி இருப்ப. நீயே பில்லை கொடுத்து இருப்ப. இப்பவும் அதைத் தானே பண்ணி இருக்க. அவளுக்கு இல்ல, உனக்குத் தான் ஏதோ பிரச்சனை போல இருக்கு? காசு தானே நம்ம ஜாயின்ட் அக்கவுண்ட்டில் இருந்து எடுத்துக்கோ. ஒவ்வொரு முறையும் இதே…”

அவன் முடிக்கும் முன் கொந்தளித்து விட்டாள் ராகவி.

“நான் காசுக்காகச் சண்டை போடுறது போலத் தெரியுதா உதய் உங்களுக்கு? நீங்க என்கிட்ட முன்னாடியே சொல்லாதது தான் என் கோபமே தவிர. அவங்களுக்காகக் காசு செலவு பண்றதில் இல்ல.

என்னை எப்பவும் ஃபர்ஸ்ட் பிரையாரிட்டியா வைங்க. அதைத் தான் எப்பவும் சொல்றேன். எப்பவும் ஒரு காரியத்தைச் செய்திட்டு வந்து சப்பை கட்டு கட்டி, காரணம் சொல்லாதீங்க. அதே போல இப்படிப் பழியை என் மேல திருப்பாதீங்க.”

“ராகவி, என்ன வேணும் உனக்கு? ரெண்டு லட்சம் என்னோடதில் இருந்து உன் அக்கவுண்ட்டுக்கு மாத்திக்கோ. பிராப்ளம் சால்வ்டு” என்றவனைக் கொலை வெறியுடன் பார்த்தாள் ராகவி.

“யாருக்கு வேணும் உங்க காசு?

அது என்ன புதுசா உன் காசு, என் காசு?. அப்போ இது உங்க வீடா? இப்போ என் வீட்டுக்கு நான் எங்க போகட்டும்? காசு விஷயம் அப்படியே உங்க அம்மா மாதிரியே பேசுறீங்க.”

“ஏய்..”

“என்ன மரியாதை குறையுது உதய்? எனக்கும் இதே போலப் பேச வரும்”

“பேசித் தான் பாரேன்” என்றவனை மலைத்துப் போய்ப் பார்த்தாள் ராகவி.

“உங்களுக்கு என்னாச்சு உதய்?”

“அதையே தான் நானும் கேட்கறேன். உனக்கு இப்போ என்ன தான் வேணும்?. எதுக்கு நடுராத்திரியில் என் ஜீவனை வாங்கிட்டு இருக்க?” அவன் அதைக் கேட்ட நொடி, அதிர்ந்து இரண்டு எட்டுக்கள் பின்னே வைத்து நின்றாள் ராகவி.

சரியாக அந்நேரம் அறையின் கதவும் தட்டப்பட்டது. அவன் அசையாமல் அப்படியே நிற்க, போய்க் கதவை திறந்தாள் ராகவி.

வெளியே விஜி தான் நின்றிருப்பாள் என்று அவளுக்கு நன்றாகத் தெரியும். மனதில் முளைத்த எரிச்சலுடன் கதவை திறந்து, “என்ன விஜி?” என்றாள்.

“அது வந்து, அக்கா…”

“அதான் வந்திட்டீங்களே மா, சொல்லுங்க” என்றாள் ராகவி, குரலில் இறுக்கிப் பிடித்த பொறுமையுடன்,

“பால் வேணுமானு…”

கோபம் மெல்ல மெல்ல உயருவதை ராகவியால் உணர முடிந்தது.

“உதய் அத்தான் தூங்கிட்டார், எழுப்பிப் பால் வேணுமான்னு கேட்கவா?” என்றாள். அவளது குரலில் இருந்த நக்கலை விஜி உணர்ந்தாளோ, என்னவோ, “சாரி கா. குட் நைட்” என்றபடி நகர்ந்து விட்டாள்.

அவள் திரும்பியதும், வேண்டும் என்றே கதவை சத்தமாக அறைந்து சாத்தினாள் ராகவி.

“இப்ப என்ன?” என்றான் உதய்.

“இவளுக்கு அறிவே கிடையாதா? அது என்ன எப்ப பாரு நாம கதவை மூடி அரை மணி நேரம் கழிச்சு வந்து கதவை தட்டுறது?” கோப மிகுதியில் அவளுக்கு மூச்சு வாங்கியது.

“ஏய், அவ பால் வேணுமா…”

“ஆமா, நீங்க பாப்பா…”

“ராகவி…” கத்தினான்.

“என்ன? ரொம்ப மிரட்டிட்டு இருக்கீங்க? நான் என்ன தப்பா கேட்டேன் இப்போ? கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தானே சாப்பிட்டு மாடிக்கு வந்தோம். சமைக்கத் தெரிஞ்ச எனக்கு, சாப்பாடு பரிமாறி, அடுப்பை ஒதுக்கி வைக்கத் தெரிஞ்ச எனக்கு, உங்களுக்குப் பால் எடுத்துட்டு வரத் தெரியாதா? அதுக்கு இவ தான் வரணுமா?” கோபத்தில் குரலை உயர்த்தினாள் ராகவி.

“ஒரு அக்கறையில் கேட்டா….”

“அந்த அக்கறை நாம கீழ இருக்கும் போதே வரணும். இல்லையா, ரூமுக்கு வந்ததும் வரணும். சரியா, அரை மணி நேரம், ஒரு மணி நேரம் கழிச்சு வந்து கதவை தட்டினா? என்ன அர்த்தம்? அவ முகத்துலயே கதவை அடிச்சு மூட…”

“ராகவி, திஸ் இஸ் த லிமிட்” கைகளைக் கட்டிக் கொண்டு சொன்னான். முகம் அத்தனை இறுக்கமாக மாறி இருந்தது.

error: Content is protected !!
Scroll to Top