Ashoka Hema
Member
- Joined
- Feb 18, 2026
- Messages
- 38
- Thread Author
- #1
எழுத்தாளராக ஐந்து ஆண்டுகளை நிறைவு செய்த என் அன்புத்தோழிக்கு வாழ்த்துகள்!
பரிபூரணியே!
மனம் பாடும்
உதயராகம் நீ!
ஊஞ்சலாடும் மனத்தில்
மழையோடு ஒரு நாள்
தேவாரசந்தங்கள் பாடி
காதலென நீ வந்தாய்!
என் முதற்கனவே,
மந்த மாருதம் வீசுகையில்
உன் கையில் ஆடும்
பூமரப் பாவை நான்!
என் மனக் கடலின்
தெண்திரை தேடலே,
உன் எழுதாத எண்ணங்கள் கொண்டு
அன்பின் ஆலாபனை செய்தாய்!
நம் மௌன மனங்களுக்குள்ளே
பிரியங்கள் புதிதாய் முளைத்து
நற்காதல் நெய்திட
சாதகப் பட்சிகளாய் காத்திருந்தோம்!
என் நேயத்தின் நியதிகள் சொல்லி
உள்ளம் உன் வசமாக
நீ
என் ஜீவனில் உறைந்திடு!
நம் காதலதிகாரம் இரண்டு
சொல்லும் போதுதான்
உணர்கிறேன் உன்
நிலவும் நினைவும் நான் என்று!
இது காட்சிப் பிழையோ
கவிதையோ இல்லையடி,
மீநிகழுணர்வில் நம்
காதல் பேசிடு கண்மணி!
வானம் தேடும் பறவையாய்
நீ என் மனம் தேடி
நேசம் நிறைத்திடு நெஞ்சமே!
என் பிரிய பிரபஞ்சமே!
இனியொரு பிரிவேது நம்முள்!
இந்த வாழ்வென்பது
ஐந்து ஆண்டுகள் தாண்டியும்
இருபத்தி ஐந்து கதைகளைக் கடந்தும்
உளமாற உன்னுடன்
தொடரட்டும்!
இப்படிக்கு காதல் தோழி,
அசோகா
பரிபூரணியே!
மனம் பாடும்
உதயராகம் நீ!
ஊஞ்சலாடும் மனத்தில்
மழையோடு ஒரு நாள்
தேவாரசந்தங்கள் பாடி
காதலென நீ வந்தாய்!
என் முதற்கனவே,
மந்த மாருதம் வீசுகையில்
உன் கையில் ஆடும்
பூமரப் பாவை நான்!
என் மனக் கடலின்
தெண்திரை தேடலே,
உன் எழுதாத எண்ணங்கள் கொண்டு
அன்பின் ஆலாபனை செய்தாய்!
நம் மௌன மனங்களுக்குள்ளே
பிரியங்கள் புதிதாய் முளைத்து
நற்காதல் நெய்திட
சாதகப் பட்சிகளாய் காத்திருந்தோம்!
என் நேயத்தின் நியதிகள் சொல்லி
உள்ளம் உன் வசமாக
நீ
என் ஜீவனில் உறைந்திடு!
நம் காதலதிகாரம் இரண்டு
சொல்லும் போதுதான்
உணர்கிறேன் உன்
நிலவும் நினைவும் நான் என்று!
இது காட்சிப் பிழையோ
கவிதையோ இல்லையடி,
மீநிகழுணர்வில் நம்
காதல் பேசிடு கண்மணி!
வானம் தேடும் பறவையாய்
நீ என் மனம் தேடி
நேசம் நிறைத்திடு நெஞ்சமே!
என் பிரிய பிரபஞ்சமே!
இனியொரு பிரிவேது நம்முள்!
இந்த வாழ்வென்பது
ஐந்து ஆண்டுகள் தாண்டியும்
இருபத்தி ஐந்து கதைகளைக் கடந்தும்
உளமாற உன்னுடன்
தொடரட்டும்!
இப்படிக்கு காதல் தோழி,
அசோகா