• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

Hi sis..
நான் முதன் முதலில் மல்லிக்காம்மா தளத்தில் தான் உங்களது பரிபூரணி படித்தேன்...எதேர்ச்சையாக படிக்க ஆரம்பித்தது தான்... ஆனால் இன்றளவும் மனதை விட்டு நீங்கவில்லை...

வீராவின் கதையின் பெயர் மறந்து விட்டேன் ஆனால் வீராவும் அவனின் மஞ்சள் மலரும்... அவனின் மலரே என்ற விளிப்பும் அவ்வவ்ப்போது ஃப்ளாஷ் ஆகும்....

அந்த கதையின் இன்னொரு நாயகன் மூலமாக எம்பதி என்ற வார்த்தையை அறிந்தேன்...திருமணத்தினத்தன்று இவனது இந்த குணத்தை கண்டு நாயகி எங்கே தன்னை தன் முதல் கணவரிடம் விட்டு கொடுத்து விடுவானோ என்று பயம் கொள்ளும் இடம் மறக்கவே முடியாதது....

பிரிக்க முடியாதது எதுவோ?? மழையும் -தேவியும் தான் சொல்லனும்... உங்கள் கதைகளில் ஆர்ப்பாட்டமில்லாத மெல்லிய சோ வென்ற மழையும் ஒரு கதாப்பாத்திரமாக வருவதற்க்கு தவறுவதில்லை...

எதிர்மறை காதாபாத்திரங்கள் கூட இப்படி இருப்பார்களா என்ற ஆதங்கத்தை தூண்டுவார்கள் அன்றி வெறுப்பான எதிர்மறையான மனநிலையை தோற்றுவிக்க வில்லை...

நாயகர்கள் ஏன் இப்படி இருக்கிறார்கள்??.... இத்தனை அன்பும் ஆசையும் ஆர்வமும் தன் துணை மேல் ஒரு ஆணால் கொட்டிக்கொடுக்க முடியுமா??.. யாரும் சூப்பர் ஹீரோ இல்லை... சாதாரண ப்ளஸ் மைனஸ் உள்ள மனிதர்கள் தான்.. ஆனால் அவர்களின் பிரியத்தை வார்த்தையில்... செயலில் காண்பிக்கும் நொடியில் என்னை அறியாமல் பெருமூச்சு வருவதை தவிர்க்க முடியவில்லை....

நாயகிகள் காதல் செய்வது ஒன்றே என் கடன் என்றில்லாம்மல்...தனக்கான தனித்துவத்துடன் திறமையுடன் ஜொலிக்கிறார்கள்....

சில இடங்களில் எனக்கு நீங்கள் காஞ்சனாஜெயதிலகரை ஞாபகப்படுத்துவீர்கள்...

மொத்தத்தில் நான் படித்த உங்கள் கதைகள் மனதிற்க்கு இதமும் நினைவிற்க்கு குளுமையும் சேர்ப்பவை...

🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
 
Last edited:
நான் முதலில் படிச்ச கதை மழையோடு ஒருநாள், மழை தான் என்னை இழுத்தது, உங்க கதைகளில் நனைய வைத்தது, அதற்கு பிறகு ரெகுலரா உங்களை ஃபாலோ பண்றேன், என்னோட பேவரிட் ஆல்வேஸ் வீரா தான், மந்த மாருதன்ல பூக்களைப் பற்றிய உங்களோட படத்துடன் கூடிய விளக்கம் அவ்ளோ அருமை, 💐💐💐💐💐💐
 
உங்க கதைகள்ல ஒன்னு ரெண்ட தவிற மற்றதையெல்லாம் படிச்சிருக்கிறேன்.

உங்க கதையில இந்த கரு பிடிக்கும்னு சொல்றதவிட,உங்க எழுத்து நடை,அதை எப்படி சொல்ல, வார்த்தைக்காக..வார்த்தை கோர்ப்புகாக்காக ,இதமா மனம் அப்படியே ஏதோ செய்யற மாதிரியான உலகத்தில வாசிப்பு அனுபவத்தை இப்படி தான் உணர்ந்தேன்,இந்த கதை இதனால பிடிச்சது...என்னால சொல்ல முடியாது.

எங்கே இருந்து இவங்களுக்கு வார்த்தைகளை அழகா கோர்க்க பழகினாங்கனு யோசிப்பேன்.

கதையை தாண்டி அந்த காதல் ...பிரியமே...அப்படி பொங்கும்....அதை படிக்கும் மனசு தளும்பும்...

கண்ணுக்கே தெரியாத மந்திர கட்டு...கேள்விப்பட்டியிருக்கீங்களானு தெரியாது...ஆனா எழுத்தால கட்டி போடறத உணர்ந்திருக்கிறேன்.

உங்க கதைகள மேக்சிமம்...கதையோட்டத்தை விட...எழுத்தோட்டத்திற்காக படிப்பேன்...

தனி தனியா உங்க கதைய உங்களோடு பகிர்ந்துக்கனும்னா.
.நான் கண்டிப்பா நோட்ஸ் எடுக்கனும்...

ஏன்ன வரிகள் கவர்ந்ததா...வாக்கியங்கள் கவர்ந்ததானு பிரிக்க முடியாம எழுத்து ஈர்ப்பு என்னும் இழுவிசைக்குள் சிக்கிடுவேன்...

பிரிய நடைமழையில்,எழுத்துபூக்குவியலில் எதையென கூற சுகந்தமாய் நனைவதை வடிப்பதற்கில்லை...

இன்னும் தூரலிலும் சாரலிலும் நனைய..அடை மழையில் அடித்து செல்லவும்...ஆவலுடன்

பிரியங்களுடன்
வாசு(ச)கி
 
Last edited:
ஹலோ ப்ரெண்ட்ஸ்!

Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.

இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.

அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.

நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.

அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’

"Every reader has a story. Tell us how yours began."

தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?

முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.

எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.

மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.

எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.

அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.

இந்த பதிவில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் எண்ணங்களை பதிவு செய்யலாம்.

உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

போட்டி முடிவடையும் நாள் : ஜூன் 31.
அதற்கு பிறகு வரும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.

நன்றி!

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
எல்லாத்தையும் எல்லாரும் சொல்லிட்டாங்களே. எனக்கு எதையும் மிச்சம் வைக்கலையேம்மா. எங்க சுத்துனாலும் என் மனசு பிரபஞ்சன்கிட்டேதான் வரும். என்கிட்டேயும் உங்களைத் தெரிஞ்ச கதை இருக்கே. பெருசாஆஆஆ போகும். டெட் லைன்குள்ளே வந்துடுவோம் 😌
 
ஹாய் மா...
நான் முகநூல் விமர்சனம் பார்த்து உங்க பூமரப் பாவைகள் கதைய படிச்சேன்...அப்போ உங்க பெயர் கூட மனசுல தங்கல..ஆனா கதைய பத்தி விஜி சிஸ்ஸோட டிஸ்கஸ் பண்ணது ஞாபகம் இருக்கு...அப்புறம் ஊஞ்சலாடும் மனது உதய ராகம்னு படிப்படியா உங்க கதைய மிஸ் பண்ணதேயில்ல😍
இந்த சீன் இந்த டைலாக்னுலாம் பொதுவா எந்த கதைக்கும் ஞாபகம் இருக்காது🙈🙈🙈🙈
பிடிச்ச ஹீரோ உங்களுக்கே தெரியும்😃
செல்வா😍😍😍😍
 
💞💞
தேவிமா!!
உங்களோட எந்த கதை முதலில் படிச்சேன்னு எனக்கு தெரியல.. மழையும், ஆழ காதலும் ரொம்ப பிடிக்கும். அது தான் தேடி படிக்க வச்சது... உங்க கதையில் எதெல்லாம் பிடிக்கும்னு அப்புறம் விலாவரியா சொல்றேன்.
 
ஹலோ ப்ரெண்ட்ஸ்!

Welcome to a Joyful JUNE edition of Kadhaicafe!
It has been three months since I started Kadhaicafe.

இந்த மூன்று மாத காலமும் உங்களோட வரவேற்பும் உற்சாகமும் கதை கஃபேயை நறுமணத்தோடு இயங்க வைக்குது.

அதனால் இன்னும் கஃபேயின் நறுமணத்தைக் கூட்டும் வண்ணம் ரீடர்ஸ்க்காக போட்டி நடத்தப் போறோம். போட்டின்னா ரொம்ப சீரியஸா எல்லாம் இல்லை. பெரிய கண்டிஷன்ஸும் இல்லை. ஜாலியா, சந்தோஷமான ஒன்னாதான் இருக்கும்.

நிறைய ஐடியாஸ் இருக்கு. ஒவ்வொன்னா செய்வோம்.
முதலில் என்னை உங்களுக்கு என் கதையா தெரியும். உங்களை உங்க பெயரா, கருத்தா எனக்குத் தெரியும்.

அதுதான் போட்டியே.
‘A Cup of Stories, A Sip of Memories’ – ‘காஃபியின் முதல் சுவை’

"Every reader has a story. Tell us how yours began."

தேவி மனோகரன் ஆகிய என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?
யார் மூலமாகத் தெரியும்?
எந்தக் கதையில் இருந்து என் எழுத்துக்களைப் பின் தொடர்கிறீர்கள்?
என் பெயரை சொன்னா உங்களுக்கு எந்தக் கதை, எந்தக் கதாபாத்திரம் நினைவுல வரும்? எந்தச் சொல், எந்த வரில என்னை நீங்க தொடர ஆரம்பிச்சீங்க?

முதல் சுவையை நீங்க பகிர்ந்துக்கலாம். English, Tamil, tanglish (முடிந்தவரை இல்லாமல் இருந்தால் நலம்) இந்த மொழிகள்ல உங்க கருத்துகளை இந்தப் பதிவின் கீழ் நீங்க பகிரலாம்.
இங்கு தளத்தில் மட்டுமே பதிவிட வேண்டும். முகநூல் கடிதங்கள் போட்டிக்கு தகுதி பெறாது.

எல்லாரோட அனுபவமும் எனக்குப் பிடித்தமானவையாகக் கண்டிப்பா இருக்கும். ஆனா சிலது நெருக்கமானவையாக ஆத்மார்த்தமானதாக இருக்கும். அதனால அவங்கதான் வின்னரா இருப்பாங்க.
இல்லை, எல்லாமே நெருக்கமா இருந்தா, கண்டிப்பா spin wheel ல போட்டுதான் சொல்வேன். இல்லைன்னா இரண்டு முறைப்படி வின்னர் தேர்ந்தெடுப்போம்.

மொத்தம் மூன்று பரிசுகள்.
Author copies, gift voucher எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
எந்த நாட்ல உள்ளவங்க வேணும்னாலும் பங்கேற்கலாம். ஆனா பரிசு இந்திய முகவரிக்கே அனுப்பப்படும், unless otherwise its vouchers.

எப்படி இருந்தாலும் இது போட்டி என்பதை விட, எனக்கு நீங்க எழுதுற கடிதம். நான் வாசிக்க விரும்புற கடிதம். என்கிட்ட சொல்லணும்னு நினைச்சிருப்பீங்க, அதைச் சொல்ல ஒரு வாய்ப்பு, கேட்கணும்னு நினைச்ச எனக்குக் கேட்க ஒரு வாய்ப்பு.

அதனால, சந்தோஷமா எழுதுங்க.
அடுத்த அறிவிப்போடு விரைவில் வருகிறேன்.

இந்த பதிவில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் உங்களின் எண்ணங்களை பதிவு செய்யலாம்.

உங்கள் ஒவ்வொருவரின் பதிவுக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்.

போட்டி முடிவடையும் நாள் : ஜூன் 31.
அதற்கு பிறகு வரும் பதிவுகள் போட்டிக்கு எடுத்துக் கொள்ளப்படாது. ஆனால் நீங்கள் தொடர்ந்து பதிவு செய்யலாம்.

நன்றி!

பிரியங்களுடன்,
தேவி மனோகரன்.
June 31a🤔🤔🤔june la 30 days dhane
 
ஊஞ்சலாடும் மனது தான் நான் படித்த உங்களுடைய முதல் கதை TNW தளத்தில்..... அப்போ உதய ராகம் பற்றி நிறைய பேர் சொல்லி இருந்தாங்க.....அதை பார்த்துட்டு உங்க கிட்ட கேட்டு நீங்க kindle link share பண்ணி படித்தேன்..... அப்போதிலிருந்து உங்களோட எல்லா கதையும் வாசித்து கொண்டிருக்கிறேன்....

மழையும் மலரும் தான் எனக்கு உங்க எழுத்து பிடிக்க காரணம்.....
நீங்க ஒவ்வொரு முறை மழையையும் மலரையும் காட்சில எழுதும் போதும் மழையோட புத்துணர்ச்சியையும் மலரோட நறுமணத்தையும் நிஜமா அனுபவிக்கிற உணர்வு.......

எல்லா கதையும் பிடிக்கும்னாலும் சிலது ரொம்ப நெருக்கமா நினைப்போம்..... அப்படிப்பட்ட வரிசையில் மந்த மாருதன் தான் முதல்.....
அதுல நீங்க கொடுத்த பூக்களும் அதோட விளக்கமும் தனிச்சிறப்பு....

அடுத்து என்னோட ப்ரிய வரிசையில் பிரியங்கள் புதிது, பரிபூரணி( friends gang ல் சுஹா தான் என்னோட favourite), அன்பின் ஆலாபனை , காதலதிகாரம் இரண்டு .....இப்போ பார்த்திபன் காதலி
 
தேவிமனோகரன் என்ற எழுத்தாளரை முதன் முதலில் நான் கண்டுகொண்டது தமிழ் நாவல் ரைட்டர் தளத்தில் தான்.

முதன் முதலில் படித்த நாவலும் முதன் முதலில் படித்த கதை மாந்தர் என்று யாரும் நினைவில் இல்லை இன்னும் ஒரு படி மேல் நான் விரும்பி விமர்சனமும் கொடுத்துள்ளேன் அதுவும் நினைவில் இல்லை 🤷🤷🤷🤷🤷ஆனால் நினைவில் நின்றது எல்லாம் கதை மாந்தர்களின் ரம்மியமான காதல் மழையும் நிதர்சனத்தில் பொழியும் வான் மழையும் மட்டுமே... 💕💛💛💕

பல்வேறு தருணங்களில் உங்களுடைய கதையை படிக்கும் போது என் வாழ்கையில் நடந்த நிகழ்வுகள் காதல், தவிப்பு, அழுகை, சந்தோசம் என பல நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வரும் அந்த தருணத்தில் மிகவும் நெகிந்து படித்து ரசிப்பேன்.

இந்த ஹீரோ தான் பெஸ்ட் இந்த ஹீரோயின் தான் ஸ்மார்ட் அப்படி ஒரு வரையறைகள் நிச்சயம் யாருக்கும் கொடுக்க விரும்பவில்லை ஏனென்றால் ஒவ்வொரு தலைவனும் தலைவியும் தனி துவமானவர்கள் அவரவர் இயல்புகள் அவரவரை அழகாகவும் பண்பாகவும் நமக்கு காட்சிப்படுத்தி ரசிக்கவும், துடிக்கவும், நெகிழ்ச்சியும் அடைய செய்தவர்கள்.

தேவி மனோகரன் கதையை படிக்க வேண்டும் என்று நினைக்கும் பொழுது ஜில்லென்று மழைத்துளி பனித்துளியாய் மனதில் ஒரு சிலிர்ப்பை ஏற்படுத்தியது நிஜம்💜💜💜💜💜., அதேசமயம் எந்த இடத்தில் எந்த பூதம் நெஞ்சை பதற செய்யுமோ என்று பயத்துடன் படித்ததும் நிஜம்.... என் தோழிகள் பலரிடம் நல்ல கதைகள் மன நிம்மதியுடன் படிக்க நான் பரிந்துரைத்த எழுத்தாளர்களில் தாங்களும் ஒருவர்.....

மென்மேலும் பல்வேறு அழகிய காதல் படைப்புகளை உங்கள் எழுத்து நடையில் காண மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கும் உங்கள் தோழி💞💜💞💐💐💐💐💐💐

Back
Top