பார்த்திபன் காதலி – 16 (3)

பிரியதர்ஷினி வீடு வந்தவள் கணவனைத் தேடி நேராக மொட்டை மாடிக்கு சென்றாள்.

பார்கவியின் வீட்டு மொட்டை மாடியை வெறித்து நின்றிருந்தான் அவன்.

“பிரபா, என்ன தனியா இங்க வந்து நின்னுட்டீங்க?” அவன் மேல் சலுகையாகச் சாய்ந்து நின்று அவள் கேட்க, அவளைத் தோளோடு சேர்த்தணைத்துக்‌ கொண்டான் பிரபஞ்சன்.

“பார்த்தி வந்திருந்தான். அதான் நாங்க ரெண்டு பேரும் இங்க நின்னு பேசிட்டு இருந்தோம்”

“அண்ணா வந்தாங்களா? என்கிட்ட சொல்லவே இல்ல நீங்க? நான் அந்தப் பக்கம் போனதும்.. உங்க ஃப்ரெண்டை வர வச்சருக்கீங்க” என்று விளையாட்டாய் அவன் வயிற்றில் குத்தினாள்.

“ப்ச் பிரியா. அவனே பாவம் குழப்பத்துல வந்தான். அதை விடு, என்னாச்சு பார்கவிக்கு இன்னைக்குக் காலையில இருந்து அவ நம்ம வீட்ல இருந்தா. அப்போ நீங்க ஏதோ சீரியஸா பேசிட்டு இருந்தீங்க. இப்போ நீ அவ வீட்டுக்கு போயிட்டு வர்ற‌. இப்போ அவளோட வருங்காலம் வேற வந்துட்டு போறார் போல. என்ன பிரியா நடக்குது? ஆல் ஓகே? அவளுக்கு எதுவும் பிரச்னையா?” என்று கூர்மையாகக் கேட்டான். அவன் கண்கள் மனைவியின் முகத்தை ஆராய்ந்தன. அகத்தை அப்படியே முகத்தில் காட்டியது அவள் கண்கள்.

“அதுவா பிரபா..” என்று ஆரம்பித்து மேலோட்டமாகப் பார்கவியின் வாழ்க்கையில் நடந்த அனைத்தையும் அவனிடம் ஒப்பித்திருந்தாள். அவன் கண்களில் கூர்மை கூடியது.

“அந்தப் பையன் யாருன்னு உன்கிட்ட சொன்னாளா‍?” என்று சந்தேகம் கேட்டான்.

“ப்ச், ‍இல்லையே பிரபா. ஏன் கேட்கறீங்க?” என்று அவள் கேட்டதும், பார்த்திபன் அவனிடம் பகிர்ந்ததை மனைவியிடம் மனம் திறந்தான்.

ஒரே நேரத்தில் இருவருக்கும் ஒரே விதமான அனுபவம் எப்படி வாய்க்கும்? என்ற சந்தேகம் இருவருக்கும் இருந்தாலும் அதற்கு வார்த்தைகளால் வடிவம் கொடுக்கவில்லை அவர்கள்.

இருவரும் ஒருவரையொருவர் கேள்வியுடன் ஏறிட்டார்கள்.

“அந்தப் பாரிவேந்தனுக்கு லவ் ஃபெயிலியராம். அதுவும் நாலு வருஷ லவ்வாம். ஆனா அவங்க வீட்ல யாருக்கும் அது தெரியாதாம். பாரு அப்பா கல்யாணத்துக்குப் பாரிவேந்தன் பத்தி விசாரிப்போ கூட யாருமே அதைப் பத்தி சொல்லலியாம். என்னால நம்பவே முடியல பிரபா. எப்படி யாருக்கும் தெரியாம இருக்கும்?” என்று ஆச்சர்ய அதிர்ச்சியுடன் கேட்டாள்.

பிரபஞ்சன் அவளை நமுட்டு சிரிப்புடன் பார்க்க, “ப்ச், உடனே என்னை எதுக்குப் பாக்கறீங்க? இது ஒன்னும் நம்ம கதை மாதிரி இல்ல. அந்தப் பொண்ணும் அவரை லவ் பண்ணுச்சாம்.” என்றாள் வேகமாக.

“ஓ, இப்போ நான் என்ன செய்யணும் பிரியா? அதைச் சொல்லு” என்றான்.

“பார்கவிக்காக நான் ஏதாவது செய்யணும் பிரபா. ஆனா என்ன செய்யன்னு தெரியல. எனக்கு அந்தப் பாரி நல்லவன்னு தெரிஞ்சா போதும். அதுவே எனக்குப் பெரிய நிம்மதியா இருக்கும்”

என்றாள் அவன் முகம் பார்த்து.

அவனுக்கும் தன் நண்பன் பார்த்திபனுக்காக ஏதாவது செய்தே ஆக வேண்டும் என்ற உந்துதல் இருக்க, “நீ அந்தப் பாரியை பத்தின, உனக்குத் தெரிஞ்ச டீட்டெயில் சொல்லு. நான் விசாரிக்கறேன்” என்றான். பாரிவேந்தனை பற்றி அவள் சொல்ல சொல்ல அவன் அலைபேசியில் குறிப்பெடுத்துக் கொண்டான்.

அவன் வேலை செய்யும் நிறுவனத்தைப் பற்றி அவள் சொல்ல, “அங்க எனக்குத் தெரிஞ்ச எவனும் இல்லையே” என்று யோசனையுடன் தலைக் கோதினான்.

“பட் பார்த்தியோட மாமா பையன் அங்கதான் இருக்கான். அவன்கிட்ட கேட்க சொல்லுவோமா?” என்று கேட்டவனுக்குத் திடீரென்று சின்னதாக ஓர் உறுத்தல் மனத்தைப் பிராண்டியது.

பார்கவியின் காதல் கதையை மீண்டும் மனைவியைக் கேட்டுத் தெளிவுப்படுத்திக் கொண்டான். பார்த்திபன் சொன்னதை ஒருமுறை மனத்தில் ஓட்டி பார்த்தான்.

இரண்டுக்கும் இடையே ஓர் இழை ஓடுகிறதோ? பெரிய ஒற்றுமை இருக்கிறதோ என்ற சந்தேகம் வந்ததும் உடனடியாக நண்பனை அழைத்து விட்டான்.

“நான் பார்த்திகிட்ட அந்தப் பாரியை பத்தி விசாரிக்கச் சொல்றேன். வேற வெளி ஆளுங்ககிட்ட சொன்னா சரியா இருக்காது” என்று மனைவியிடம் சொல்லி விட்டு அலைபேசியுடன் நகர்ந்தான்.

மொட்டை மாடியின் மற்றொரு மூலைக்குச் சென்று, நண்பன் அழைப்பை ஏற்றதும், “பார்த்தி, உன்கிட்ட லவ் சொன்ன அந்தப் பொண்ணை எனக்குத் தெரியுமா?” என்று நேரடியாக அழுத்தமாகக் கேட்டிருந்தான்.

அந்தப் பக்கம், “ஆங் என்னடா பிரபா கேட்ட?” என்று தடுமாறிய பார்த்திபன், நொடியில் சுதாரித்திருந்தான்.

தொண்டையைச் செருமி சீர் செய்து, “அதைக் கேட்கவா கால் பண்ண?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

“பதில் சொல்லு பார்த்தி”

“என்னடா நீ…”

“எனக்குத் தெரியுமா தெரியாதா?”

“ப்ச் பிரபா, என்னடா வேணும் உனக்கு?”

“எனக்கொரு ஹெல்ப் வேணும்டா. நம்ம பார்கவி இல்ல..”

“ம்ம், அவளுக்கு என்ன?” என்று குரலில் எந்தவித மாற்றமும் இல்லாமல் கேட்டான்.

மறுகணம் அவனது கணிப்பு தவறோ என்று குழம்பினான் பிரபஞ்சன்.

“பார்கவி கல்யாணம் பண்ணிக்கப் போற மாப்பிள்ளை உன் மாமா பையன் ஒர்க் பண்ற கம்பெனிலதான் ஒர்க் பண்றான். சேம் டெக்சாஸ் பிராஞ்ச். சோ அவனுக்கு இந்தப் பாரியை தெரிஞ்சுருக்க வாய்ப்பிருக்கு. அவன்கிட்ட இவனைப் பத்தி சொல்லி, கொஞ்சம் விலாவரியா விசாரிச்சு ஆள் எப்படின்னு கேட்டு சொல்றியா?” என்று கேட்டான்.

“எதுக்குடா? என்ன திடீர்னு?” என்று படபடத்தான் பார்த்திபன்.

“ஜஸ்ட் விசாரிக்கணும்னு தோனுச்சுடா, பிரியா கேட்டா. ஆமா நீயேன் டென்ஷனாகற?”

“நமக்கு நல்லா தெரிஞ்ச பொண்ணுடா. நம்ம பாரு. அவளுக்கு ஒன்னுன்னு நீ பதறும் போது நான் பதற மாட்டேனா மிஸ்டர் பி?” என்று இயல்பாகப் பேசினான்.

“ஓகே. யூ ஹவ் அ பாயிண்ட் பார்த்தி. உனக்கு மாதிரி எனக்கும் நம்ம பார்கவி மேல இருக்க அக்கறையில் கேட்கறேன். எனக்காக விசாரிச்சுச் சொல்றியா பிளீஸ்?”

“டேய் பிரபா, நான் கேட்டு சொல்றேன்டா. அதுக்காகப் பிளீஸ் போடாத பிளீஸ்.” என்றான்.

“பார்த்தி, பாரு கல்யாணத்துக்கு இன்னும் மூனே வாரம்தான் இருக்கு. சோ கொஞ்சம் சீக்கிரமா விசாரிச்சு சொல்ல சொல்லுடா. இட்ஸ் வெரி அர்ஜண்ட்” என்றான் பிரபஞ்சன்.

பார்த்திபனுக்கும் பிரபஞ்சனின் பதற்றம் தொற்றியது.

உன்னை வேண்டாம் என்று கை விட்ட பின்பும், உன் வாழ்வின் முடிவுகளை மீண்டும் மீண்டும் என் கைகளிலேயே கொண்டு வந்து சேர்த்து எனை சோதிக்கிறது காலம்.

பார்த்திபன் அவசரமாக அலைபேசியில் தன் மாமன் மகனை அழைத்தான்.

காலம் செய்யும் மாய வித்தையின் முடிவையும் காலமே முடிவு செய்யட்டும் பார்த்திபா!

error: Content is protected !!
Scroll to Top