Narmadha mf
Active member
- Joined
- Mar 8, 2026
- Messages
- 115
- Thread Author
- #1


View attachment 144
கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை மனதை அழகாய் கொள்ளை கொண்டது கதைக்களம்
.
தேன்யாழி:மழலை மனம் மாறாத வயதில் தாயை இழந்து பரிதவித்த பிள்ளையை பெரியன்னை பாலினும் தூய உள்ளத்தோடு மடி தாங்கி அரவணைத்து தாயின் இடத்தை நிரப்பினாலும் தன்னை ஒதுக்கும் சகோதர, சகோதரியின் செயலால் நெஞ்சம் தவிக்க துவண்டது பிஞ்சு மனம். காலமும் சூழ்நிலையும் நிதர்சனம் உணர்த்த பருவ வயதில் உணர்வுகளை தன்னுள் அடக்கி எதிர்பார்ப்புகளை கைவிட்டு கைக்கு கிடைத்த உன்னத நட்பையும், உயிர் வரை ஊடுருவும் நேசத்தை தந்த மன்னவனையும் கை கோர்த்து தோள் சாய்ந்து இளைப்பாறியவள் உள்ளதை கண்டு நெஞ்சம் நெகிழ்ச்சி அடைந்தது
.
தென்னவன் தேன்தமிழன் :வீரம், விவேகம், அன்பு, கலகலப்பும் கொண்ட தூயவன்
.தன் அன்பு தாய், தந்தையை இழந்து பரிதவித்த சூழ்நிலையில் தங்கையின் நலனை கருத்தில் கொண்டு தன்னை மீட்டு தாயுமானவனாய் அவளுக்கு துணையாக இருந்தவன் குணம் என்ன சொல்ல பேரழகு
.
தென்னவன் -தேன்யாழி
இரு நெஞ்சங்களும் அன்னை அன்பை ஒருவருக்கொருவர் பரிமாறி காதலை தேன் சுவையாய் ரசித்து ருசித்து பரிமாறி காதல் பூந்தோட்டத்தில் பூத்து மகிழ்ந்து வாழ்வை வண்ணமயமாக்கி வாழ்வதை கண்டு நெஞ்சம் மகிழ்ச்சியில் விம்மியது
.
செந்தூர பாண்டியன்-குந்தவை :
பெயருக்கு ஏற்ற ஆளுமையை கொண்டவன் உள்ளமும் அழகு தான் இருப்பினும் தன் தந்தையின் மீதும் அவரின் உறவுகள் மீது காட்ட வேண்டிய கசப்பை ஒரு பாவமும் அறியாத தங்கையின் மீது காட்டியது என்ன சொல்ல இவன் மீது ஆற்றாமை கொடுத்தது. தங்கையின் அன்பையும் அவளது ஏக்கத்தையும் உள்ளம் கவர்ந்தவள் மற்றும் அவனது உடன்பிறப்பின் மூலம் தெளிந்து குற்றவுணர்வில் தவித்து தன்னை திருத்தி வருந்தியவன் நெஞ்சம் அழகு. தன்னை புரிந்து அறிந்து மனதை கொள்ளை கொண்ட குந்தவையை கரம் பிடித்து காதலுடன் வாழ்வதும் அழகு
.
@Pavithra narayanan அழகான கதை வாழ்த்துக்கள் டியர்
View attachment 145