Narmadha mf
Active member
- Joined
- Mar 8, 2026
- Messages
- 114
- Thread Author
- #1

கதையின் ஆரம்பம் முதல் இறுதி வரை சுவாரசியம் சற்றும் குறையாமல் மனதை கவர்ந்து சென்றது கதைக்களம்
.
பிரபஞ்சன் :முதல் பார்வையில் தன் கண்ணில் நுழைந்து சிறுபூவாய் ஈர்த்தவள் மீதான பாசம் நாளடைவில் பருவ மங்கையாய் ஜொலித்த போது காதலாய் உச்சம் பெற்று அவளுக்கே தெரியாமல் பிரபஞ்சத்தின் ரகசியமானாள்
.
நல் ஆண்மகனாய் தாயின் மாணவியிடம் காதல் பயிரை வளர்க்காமல் மனதில் காலங்களில் நகர்வில் காதலை ரகசியமாக ரம்மியமாக வளர்த்து தக்க தருணத்தில் திருமண பந்தத்தில் மிகவும் அழகாக தன்னவளை தன் கை சேர்த்தவன் சாதுரியமும் அழகு தான்
.
மனதோடு மட்டுமே உறவாடிய பிரியத்தின் மீதான பிரியம் கை சேர்ந்தவுடன் அளவில்லாமல் பொழிந்து கொண்டாடி உள்ளம் மகிழ்ந்தவன் உள்ளத்தில் ஒரு மூலையில் ஏமாற்றமும் கொண்டு தவித்தது என்ன சொல்ல இதுவும் பிரியத்தின் மீதான மற்றுமொரு தேடல் தான்.
தன் வாய் மொழி அல்லாமல், கண் பார்வை உணர்த்தாமல் எப்படி பிரியம் பிரியத்தை உணருவாள் என்று இவனுக்கு புரிந்தாலும் புரியாமல் செய்த சில விடயங்கள் ஆற்றாமையை இவன் மீது கொடுத்தாலும் இதுவும் பிரியத்தின் மீதான மற்றொரு பரிமாணம்
.
பிரியதர்ஷினி :அழகும், பண்பும், பாசமும் கொண்ட மென்மலர்
மனதிற்கு இனிய பாசமான உறவுகளினால் கொண்டாட பட்டு சந்தோச வானில் சிறகடித்த பறவை இவள்.
தந்தையின் விருப்பத்தில் தனை தேடிவந்த மனதிற்கு மிகவும் பிடித்த ஆசிரியர் மகனை மனமுவந்து ஏற்று திருமண பந்தத்தில் நுழைந்து காதல் பறவையாய் மாறி மகிழ்ச்சியுடன் திகழ்ந்தது கண்டு மகிழ்ந்தது உள்ளம்.
தன் கணவன் மீதான உரிமை போராட்டத்தில் அவன் விரும்பிய விளையாட்டு மற்றும் நட்பு கூட சற்று கசந்து தான் போனது இவளுக்கு, இருப்பினும் கணவனின் மனநிலை, அவனது விருப்பம் அனைத்திற்கும் மேல் தன் மீது வைத்துள்ள எல்லையில்லா காதல் அறிந்து நெகிழ்ந்து உருகி கலங்கியவள் உள்ளம் கண்டு உருகியது நெஞ்சம்
.
மாமியாரின் உள்ளம் அறிந்து அனுசரித்து அவருக்கு பக்க பலமாய் இருந்து கணவனின் ரசனையை மீட்டு கொடுத்து ஜொலித்தது அழகு
.
பிரியபிரபஞ்சம் பிரபஞ்சத்தின் அனைத்து பண்புகளையும் பிரதிபலித்து மிகவும் அழகான கூட்டில் குட்டி இளவரசனுடன் தேனினும் இனிமையான வாழ்வை வாழ்வது பேரழகு
.
வாழ்க வளமுடன்
@Devi Manogaran மென்மேலும் பல காதல் மலர்கள் மலரட்டும் உங்கள் கை வண்ணத்தில் 
Last edited: