• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே - 28

இதயம் திறக்காத அமைதி
இருவருக்குள் சுவர் போல
இருந்தது விலகி சென்றது....
இணைபிரியா நெருக்கம்
இனிதாய் நெருங்கி வந்தது...


புரியாத வார்த்தைகள்
புண்படுத்திய நாட்கள்
பொழுதோடு விலகி சென்றது....
புரிதலின் மென்மை
புதியதாக நெருங்கி வந்தது...


ஆதங்கத்தில் பேசிக் கொண்ட
அழுகையும்
அமைதியும் விலகி சென்றது
அன்பின் மெளனம்
அழகாக நெருங்கி வந்தது...



சிறு சண்டை சாய்ந்ததும்
சிரிப்பு மறைந்த தருணங்கள்
சிலையாக விலகி சென்றது
சின்ன சிரிப்புகள்
சேர்ந்து நெருங்கி வந்தது...



தூரம் வைத்த மனங்கள்
தொட்டால் உடையும் பயம்
தொலைவில் விலகி சென்றது
தொடுதலில் பேசும் காதல்
தோழமையாய் நெருங்கி வந்தது...




இரண்டு உயிர் அல்ல
ஒரே உணர்வாக
இருந்த பிரிவுகள் விலகி சென்றது
இணைந்த இதயங்கள்
இன்பமாக நெருங்கி வந்தது...
 
Back
Top