- Joined
- Feb 15, 2026
- Messages
- 85
- Thread Author
- #1
#காட்சிப்பிழையோ_கவிதையோ?
#டீஸர்
#Title_Reserving
#விரைவில்

கவர் கிரெடிட் Maharani Chocku
16 அக்டோபர் 2023 பேஸ்புக்கில் போட்ட டீசர் இது.

"அம்மா…" பதறி, அலறி, சுதாரிக்கும் முன் அவளின் கையில் இருந்த அலைபேசி அம்மாவின் வசமாகியிருந்தது.
"அம்மா, பிளீஸ். போனை கொடு மா"
"நான் தொண்டை தண்ணி வத்த கத்திட்டு இருக்கேன். உன் காதுல விழல? இல்ல? அப்படி என்ன இந்த போனுல பண்றன்னு நானும் பார்க்கறேன்" மகளை முறைத்தவரின் கண்கள் அலைபேசியில் படிய, ஒருவித பதட்டத்துடன் எட்டி பறிக்க முயன்றாள்.
அதில் தீவிரமாகி அலைபேசியை இறுக்கிப் பிடித்து முகத்திற்கு நேராக உயர்த்தியவரின் கண்கள் அதிர்ச்சியில் விரிய, இடக்கரம் அனிச்சையாய் அலைபேசியை தூக்கி எறிந்த மறுநொடி, வலக்கரம் மகளின் கன்னத்தில் பளீரென்று தடம் பதித்திருந்தது.
"அ…ம்மா…"
அந்த அழைப்பிற்கு மீண்டும் ஒரு அடி காதோடு சேர்த்து கன்னத்தை தொட்டது.
"குழந்தை பெத்துக்கணுமா உனக்கு? குழந்தை பெத்துக்கற வயசா உனக்கு?"
"ம்மா… இல்லம்மா…"
"காலேஜுக்கு படிக்க அனுப்பினா, என்ன வேலை பார்த்துட்டு இருக்க நீ? பிள்ளை பெத்துக்குறதை பத்தி பேசிட்டு இருக்க? என் பிள்ளையாடி நீ? எவன்டி அந்த பொறுக்கி நாய்? நாலு பிள்ளை கேட்குதோ? நாலு பிள்ளை?"
அதிர்ச்சியில் அவருக்கு அர்த்தமற்ற வார்த்தைகள் கூட வசப்படவில்லை. அவரின் கேள்விகளுக்கு மகளின் கண்கள் விரிந்ததே தவிர, தலை குனியாதது அவருக்கு பேரதிர்ச்சியாக இருந்தது.
"யாருனு சொல்லு கழுத. உன்னை தெரியாம கூட யாரும் தப்பா பார்த்திட கூடாதுனு பொத்தி பொத்தி வளர்த்துட்டு இருக்கோம் நாங்க. நீ.. நீ.. பிள்ளை பெத்துக்க பேசிட்டு.. ச்சீ.. அந்த நாயை.. " கத்திக் கொண்டே வேகமாக மகளின் அலைபேசியை தரையில் தடவியது அவரின் கண்கள். இப்போது குறுக்கே வந்த மகளின் முதுகில் விழுந்தது பளீரென்ற அடி.
"அம்மா.." பல்லைக் கடித்துக்கொண்டு வலிப் பொறுத்து, நிமிர்ந்து நின்று அதட்டிய மகளை கண்ணீரும், கொலை வெறியுமாக பார்த்தார் அந்த தாய்.
********
"வேலையா இருக்கியா.. ம்ம், இருக்கீங்களா?"
"இல்ல… கனவு கண்டுட்டு இருக்கேன். உனக்கு பார்த்தா, எப்படித் தெரியுது?" தலையை மட்டும் திருப்பி அவன் கேட்க, அந்த மேஜை விளிம்பில் சாய்ந்து நின்றவளின் கால்கள் தன் வலுவை இழந்துக் கொண்டிருப்பதாக அவளை மிரட்டியது.
"சாரி. வேலையா இருந்தா, அப்புறமா.."
"பரவாயில்ல சொல்லு" அந்த குரலை கேட்டப் பின், எப்படிப் பேசுவாள் அவனிடம். அவளின் பிடிக்கு வசப்படாமல் நழுவும் அந்த குரலை, இழுத்துப் பிடித்தேனும் சொல்லியே ஆக வேண்டிய கட்டாயத்தில் கண்ணை மூடித் திறந்து, உள்ளங்கைகளை இறுக மூடி, உடலை நேராக்கி நின்று, தன் குரலை சரி செய்ய முயன்றவளை ஒரு நொடி விழியுயர்த்தி பார்த்து விட்டு, தன் வேலையில் மூழ்கினான் அவன்.
அவன் விரல்கள் மடிக் கணினியில் சீராக இயங்குவதை பார்த்தபடியே, "நாம.. எனக்கு வந்து.. நான்.." அவள் தடுமாற, "கம் டு த பாய்ண்ட் இடியட்" என்றான் கறாராய்.
"டேட் மிஸ் பண்ணிட்டேன்.. மிஸ்ஸாகிடுச்சு" அவளுக்கே கேட்காத குரல், விசித்திரமாக அவனை சென்று சேர்ந்திருந்தது.
"என்ன டேட்? இடியட், ரிமைண்டர் போட்டு வைக்கலையா நீ? ஒரு வேலையும் உருப்படியா செய்ய மாட்டியா?" எரிச்சலுடன் கேட்டவன் நிமிர்ந்து அவளைப் பார்த்த கணம், ஏதோ புரிந்து, "ஓ" என்றான்.
அவளுக்கு, "ஓ" வென்று பெருங்குரலில் கத்த வேண்டும் போலிருந்தது. இமைகளை மறந்தும் மூடாமல், மெல்ல தலையை மட்டும் அசைத்தாள்.
"டெஸ்ட் பண்ண…" என்று ஆரம்பித்தவளின் வார்த்தைகள், அவன் இதழ்கள் அசையவும் நிற்க, "ஆஹா… உலக சாதனையில் நாமளும் இடம் பிடிச்சுட்டோம். இந்தியால ஒரு மணி நேரத்துக்கு மூவாயிரம் குழந்தைங்க பிறக்குது. சும்மாவா? இதுல நாம.." கேலியும், கிண்டலும், அதனோடு கூடுதலாக கலந்திருந்த புலம்பல் மற்றும் விரும்பத் தகாத எதுவோவொன்று அவனையே தாக்க, நெற்றியில் லேசாக தட்டிக் கொண்டு அவளைத் திரும்பிப் பார்க்க, அவள் அங்கில்லை.
"சாதனை? ம்ம். சோதனைன்னு சொல்லி இருக்கலாம் நீ?" மென்மையாய் தனக்குள் சொல்லி கொண்டு ஜன்னல் கம்பிகளை பற்றியபடி வெளியில் வெறித்தாள் அவள். அங்கிருந்த மழை மரத்தின் ரோஜா நிற மலர்கள் மெல்ல மெல்ல காற்றுக்கு அசைந்து, அவளின் நம்பிக்கையை போலவே உதிர்ந்து விழுந்தது.
********
"என்னடா பண்றானுங்க, இவனுங்க? இந்த போட்ஹவுஸ் நகரும் சொன்னானுங்க. ஆனா, இப்போ ஆடாம, அசையாம அப்படியே நிக்குது?"
"நம்மளை 12 மணிக்கு வரச் சொல்லிட்டு, ஒரு மணி வரைக்கும் போட்டை நகர்த்தாம இருக்கானுங்க."
"டைம் இப்போ ஒன்னு இருபது டா. இன்னும் எவ்ளோ நேரம் ஆக்குவானுங்க. என்னனு கேளுங்க டா" நண்பர்களின் புலம்பலை கேட்டபடி, அமைதியாய் அங்கிருந்த சோஃபாவில் சாய்ந்து அமர்ந்திருந்தான். அவன் கரத்தை பற்றியிருந்த மென்கரம், ஒவ்வொரு விரலாக வருடி ஆராய, வேதியியல், இயற்பியல், மட்டுமல்ல அவனது இதயமும் மரத்துப் போய் இருந்த காரணத்தினால், எவ்வித உணர்வும் இன்றி மரத்துப் போய் அமர்ந்திருந்தான்.
"சேட்டா.. சேட்டா.. இன்னும் எவ்வளவு நேரமாகும்? போட் ஏன் நகராம இருக்கு?"
"சாரி.. சாரி.. இதோ வந்து…" போட் ஹவுஸின் உள்ளிருந்து ஓடி வந்து சமையல் பொறுப்பில் இருந்தவர் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, அவனை முதல் தளத்துக்கு இழுத்துக் கொண்டு போனாள் அவள்.
"வாவ்…" மெலிதாய் வியப்பும், விசிலும் கேட்க, அது படகு வீடு நகர்ந்ததற்கு என்றே நினைத்தான் அவன்.
அரை மணி நேரம் கழித்தே, நண்பர்களின் வியப்பிற்கான காரணத்தை விளங்கிக் கொண்டவனின் விழிகள் தன்னிச்சையாய் விரிந்தன.
அவன் தலை தானாக திரும்பி கீழே பார்த்துக் கொண்டேயிருக்க, "கூட இருக்க பொண்ணை பாரு டா. இப்படி அவளை கூட வச்சுட்டு அப்பட்டமா வேறொரு பொண்ணை சைட் அடிச்சா உன்னை மிதிக்க போறா" எச்சரித்தான் நண்பன்.
"போட் ஹவுஸ் கேப்டன் பொண்ணான்னு ஷாக். அதான் பார்த்தேன் டா. சைட் எல்லாம் இல்ல"
"பொண்ணுங்க கப்பல் ஓட்டும் போது, போட் ஓட்ட மாட்டாங்களா? என்ன கேள்விடா இது? ஆனா, எனக்கும் இது ஷாக் தான். அப்புறம், பின்னாடி இருந்து பார்க்க அட்டகாசமான ஃபிகரா தான்.."
அவனின் முறைப்பில் சொல்ல வந்ததை முடிக்காமல் தோளை குலுக்கினான் நண்பன்.
"கீழ போய் பார்ப்போமா? இங்க இருந்து பார்க்க முகம் தெரியல" நண்பன் கேட்க, மறுப்பாக தலையை அசைத்தான். நண்பர்கள் அதிர்வான இசையை ஒலிக்க விட்டு, அதனோடு சேர்ந்து பாடி, ஆடத் தொடங்கியிருக்க, படகு வீடு மெல்ல கரைத் தொடுவதை பார்த்தபடியே கீழிறங்கினான்.
"லஞ்ச் எடுத்து வைக்கட்டா சாரே" அந்தக் கேள்வி அவனை தடுத்து நிறுத்தவில்லை.
முன்னோக்கி வேகமாக நகர்ந்தான். கரையை அடைந்ததும், அவனைக் கடந்து சமையல் பொறுப்பில் இருந்தவர் படகை ஓரிடத்தில் நிறுத்த உதவ ஓடினார். ஓட்டுநர் இருக்கையில் இருந்தப் பெண், புயல் வேகத்தில் இருக்கையில் இருந்து எழுந்து கொள்ள, அவளைப் போலவே அந்தப் படகு வீடும் நிலை தடுமாறியது.
அவளின் கைப் பற்றினான். அதை உதறி மீண்டும் இருக்கையில் பொத்தென அமர்ந்தாள். படகு வீடும் அவளைப் போலவே நிதானித்து நின்றது.
"பார்த்துங்க…"
மெல்ல விழியுயர்த்தி அவனைப் பார்த்தாள். அதுவரை பரிட்சயமாக தெரிந்த அவளது உருவம், இப்போது பளிச்சென அவன் கண்ணில் விழுந்தது.
அந்த முகம், அவனை ஊடுருவிய அந்தக் கருவிழிகள். சில வருடங்கள் விழி தொடும் தூரத்தில் பார்த்திருக்கிறான். சில மாதங்கள் விரல் தொடும் தூரத்தில் பார்த்திருக்கிறான். பல இரவுகள் இதழ் தொடும் தூரத்தில்.. இப்போது அவனது சுவாசக் குழாயை யாரோ விரல் கொண்டு அழுத்தி நெரிப்பது போலிருக்க, வாயில் காற்றை உள்ளிழுத்து அவசரமாக வெளியேற்றினான்.
"குட்டிமா…" அவளை யாரோ அழைக்க, அவனிடம் இருந்து பார்வையை விலக்கி விலகிப் போனாள்.
ஆனால், அவனோ கால்களுக்கு விலங்கிட்டது போல, அங்கிருந்து விலகி செல்ல முடியாமல் நின்றான்.
அந்த கணம் மீண்டுமொரு முறை உரிமையாய் அவளைத் தழுவியது அவன் விழிகள். உலகில் அவள் ஒருத்தியை மட்டும் இனி ஒருபோதும் உரிமை கொண்டாட முடியாது என்பதை அறிந்தே இருந்த அவனது மனது, தாளம் தப்பித் துடித்தது.