Narmadha mf
New member
- Joined
- Mar 8, 2026
- Messages
- 12
- Thread Author
- #1

இருமனங்கள் காதலில் இணைந்து வாழ்கை கடலில் என்றும் அழியா அன்பை பெற்றால் வாழ்கை வசந்தமே.. 

.
மலர்விழியின் விழியின் தேடலின் நாயகன் அவளது விழியில் விழுந்து சத்தமின்றி இதய வாசலில் நுழைந்து புரிதலுடன் கூடிய உறவுகளின் மேன்மையினால் வாழ்கை பந்தத்தில் கார்த்திகை தீபமாய் வந்த கார்த்திக்கின் அன்பில் திளைத்து வாழும் பெண்ணவளின் நெகிழ்ச்சி கண்டு உள்ளம் பூரித்தது... 


கணவனின் கடந்த கால நிகழ்வுகளின் சுவடுகள் உயிரில்லா காகிதத்தில் உயிர்ப்புடன் உள்ள வார்த்தைகள் அனலை தராமல் இவளுக்கு ரசனையை தந்தது தான் வியக்க வைக்கிறது.. இருப்பினும் விளங்காத உண்மையை மனம் என்னும் விலங்குக்கு விளக்கவுரை கோரி தெளிவுபடுத்தி கொண்டு ஆசுவாசம் கொண்டவளின் உள்ளத்தினை கண்டு நகைப்பும் களிப்பும் தோன்றுகிறது


.
தன்னுடைய கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டவளின் நெஞ்சத்தில் இரு ஆசை உள்ளங்களின் ஆசை நிராசையாக நிர்பந்தங்கள் இன்றி வழி மாறி துணை மாறி வெவ்வேறு கூட்டில் வெவ்வேறு பரிமாணத்தில் வாழும் நிலையை எண்ணி கலங்கியவள் அவ்வலியை தற்போதும் உணர்ந்தது மனதை கலங்க செய்தது...
காதல் நிச்சயம் வலியுடைது.... 

காலத்தின் கோலத்தில் வலிமையுடன் போராடி காதலை சீராட்டும் வாய்ப்பு கிடைத்தால் காதலின் வலியும் சுகமானதே !!!!..


@Devi Manogaran அழகான கதை
...
வாழ்த்துக்கள்
Last edited: