• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

இந்த வாழ்வென்பது-விமர்சனம்❣️💚❣️

Narmadha mf

Active member
Joined
Mar 8, 2026
Messages
115
3a831945640338da9d62301a53fa535f.jpg

ஆரம்பம் முதல் இறுதி வரை நெஞ்சம் நெகிழ்ந்து ரசித்து உருகி மனதை விட்டு நீங்கா அழகிய ஓவியமாய் தித்தித்தது கதைக்களம்💕💛💕.

தேன்மொழி, அன்பழகன் குழந்தை பருவத்தில் பெற்றோரை இழந்து உற்றோரின் துணையுடன் பாசப் போராட்டத்தில் சிக்கித் தவித்து பிரிந்து வாழும் சூழ்நிலையில் இரு உள்ளங்களும் தங்களுக்குள் கதறியது கண்ணீரை வரவழைத்தது🥺🥺😢.

அன்பான உறவுகளின் கூட்டில் வாழ்ந்தாலும் தம்பியை நினைத்து உருகி கரையும் தேன்மொழியின் வலி என்றும் மறவாது.

தேன்மொழி : பொற்கொடி கந்தன் வளர்ப்பில் மிளிர்ந்து சகோதரன் ஜெயபாலன் மற்றும் சுதாகரன் அரவணைப்புடன் மகிழ்ச்சியான நாட்களையும் அனுபவித்து விரும்பிய கல்வி முதல் வாழ்கை துணை வரை இவளுக்கு வரமாக அமைந்தது நெகிழ்ச்சியை கொடுத்தது 💞💛💞.

தர்மதுரை : அன்பான பெற்றோரின் வளர்ப்பில் விவேகமும் உழைப்பும் கொடுத்த நிமிர்வில் தான் மட்டுமின்றி தன்னைச் சுற்றியுள்ள உறவுகளின் வளர்ச்சியையும் மெருகேற்றியவன் உள்ளம் பேரழகு. தான் ஆசை கொண்ட பூவனத்தை வளர்ச்சிப் பாதைக்கு மையமாய் நிலைநிறுத்தி எண்ணற்ற வெற்றி கொடியை நிலைநாட்டியவன் என்றும் அவ்வளர்ச்சிக்கு விதையாய் விழுந்த பெண் அவளின் வாக்கை மறவாமல் நெஞ்சம் கனிய நன்றி பெருக்குடன் போற்றியது மேலும் அவனது குணத்திற்கு அழகு சேர்த்தது💞💛💞.

தர்மதுரை -தேன்மொழி :

அழகான திருமண பந்தத்தில் ஒருவர் மீதான மற்றொருவரின் எல்லையில்லா நேசத்தை ஒவ்வொரு நாளும் அனுபவித்து சந்தோஷக் கடலில் மூழ்கி மகிழ்ந்த போது உள்ளம் கனிந்தது., இருப்பினும் இரு உள்ளங்களின் உள்ளத்தை பரிதவிக்க வைத்த மழலையின் மீதான ஏக்கம் மிகுந்த வலியை கொடுத்தது. கடவுள் கருணையினால் சோதனைகளை வென்று இருவரின் எல்லையில்லா நேசக்கடலில் மழலை முத்து உதித்தது பெரும் மகிழ்ச்சியை கொடுத்தது. ஒரு மழலையின் வரவில் வசந்தத்தை மீட்டெடுத்தவர்கள் வாழ்வில் மேலும் தேன் மழையாய் இரட்டை மகவின் வரவு மிகுந்த பூரிப்பை கொடுத்தது.

என்றும் எப்பொழுதும் இதே போன்ற எல்லையில்லா நேசக்கடலில் தங்களது வசந்த கால தோட்டத்தில் வண்ணமயமான பூக்களின் வாசத்துடன் இன்புற்று வாழ வாழ்த்துக்கள்💐💐💐💐.


a8021ea57508b0fa170f3861806e8d5b.jpg

@Devi Manogaran மிகவும் அழகான கதை வாழ்த்துக்கள் டியர் 🥰🥰🥰🥰💐💐💐💐.

410f30e6c19a7c86a3b93d6455bbfb19.jpg
 
வாவ் வாவ் பாடல்கள் படங்கள், விமர்சனம் எல்லாமே அசத்தல் நர்மதா டியர் ❤️ ❤️ ❤️

நன்றி நன்றி ❤️ ❤️
 
Back
Top