Shoba Kumaran
New member
- Joined
- Feb 20, 2026
- Messages
- 1
- Thread Author
- #1
Hi makkale,
Welcome to Kadhai cafe.
இது 2021 வெளிவந்து, பலரும் 'நல்லா இருக்கு'ன்னு பாராட்டின கதை.
உங்களுக்கும் பிடிக்கும்ன்னு எதிர்ப்பார்க்கிறேன்.
படிச்சுட்டு உங்க கருத்த சொல்லுங்க...
வா... காதோரம் காதல் சொல்ல 1

Shoba
படிக்கலாமா வேண்டாமான்னு யோசிக்கிறவங்களுக்கு:
FB-ல வந்த முதல் ரெவ்யூ
. Thanks to Sudha 
Sudha Ravi, September 2021
வா...காதோரம் காதல் சொல்ல!! – ஷோபா குமரன்
முதல் பக்கத்திலேயே என்னை தெறிக்க விட்டாங்க, அந்த நாட்டாமையை கொண்டு வந்து...என்னடா ஷோபா இப்படியொரு ஹீரோவை வச்சு எழுதுறாங்களே நைசா எஸ் ஆகிடுவோமான்னு யோசிச்சேன். அதிலும் அவனோட அந்த ரொமண்டிக் லுக் எல்லாம் பார்த்து கதி கலங்கி போச்சு.
இந்தக் கதையை பொறுத்தவரை எங்கேயும், எதுவும் காரண காரியம் இல்லாம சொல்லப்படவில்லை. கதையின் ஆரம்பத்திலிருந்து சொல்லப்பட்ட விஷயத்திற்கு பின்னால் வரும் சம்பவங்களின் தொடர்பு இருந்து கொண்டே இருந்தது.
காதல்!! இந்த உணர்வை இக்கதையின் ஒவ்வொரு வாக்கியத்திலும் உணர்ந்தேன். இப்படியும் காதலிக்க முடியுமா என்கிற கேள்வி உங்களுக்கு இருந்தால் நிச்சயமாக மிஸ் பண்ணாமல் இந்த கதையை படிங்க. ஒருவரை ஒருவர் தொட்டு பழகி தான் காதலிக்க வேண்டும் என்றில்லை. அவர்களின் உணர்வுகளின் ஊடே நாமும் பயணித்து அந்த காதலை உணர முடியும் என்று காட்டி இருக்காங்க.
இங்கே ஹீரோ, ஹீரோயினை தாண்டி எஸ்தர் என்னை மிகவும் கவர்ந்த கதாப்பாத்திரம். அலருக்கும், இவங்களுக்கும் இருக்கும் அந்த புரிதல், நட்பு அழகானது. அலர், எபி இருவருக்கும் இடையேயான அந்த காதல் ஒவ்வொரு கட்டத்தையும் கடக்கும் போது அவர்களோடு நானும் தவித்தே போனேன்.
இருவருக்குமான அந்த மெச்சுருட்டி தங்களின் கனவுகளுக்காக காதலை கையாண்ட விதம் அருமை. அவனை காணாமல் அவனது மிஸ் மீ யை கேளாமல் தவிக்கும் போது, எனக்கும் எங்காவது மிஸ் மீ கேட்காதா? என்கிற எண்ணம் எழாமல் இல்லை.
சில கதைகள் நம் எண்ணங்களோடு கலந்து, அதிலிருந்து வெளியே வர மனமின்றி அப்படியே அழுத்தமாக பதிந்து போய் விடும். இந்தக் கதையும் அதிலிருந்த அந்த குட் பீல் என்னை அப்படியே இன்னமும் அவர்களோடு பயணிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது.
காத்திருப்பு என்றுமே அழகானதும், அவஸ்த்தையானதும் கூட...இங்கே அலரின் காத்திருப்பு பொயட்டிக் ஜஸ்டிஸ் என்று சொல்லக் கூடிய வகையை சார்ந்தது. இது நடந்தால் நன்றாக இருக்கும், நடக்கும் என்கிற நம்பிக்கையை கொடுக்கும் வகையில் ஒரு சில காரணிகள் தொடர்ந்து வரும். அப்படித்தான் ஷோபா நமக்கும் நம்பிக்கையை இறுதி அத்தியாயத்தில் சிறிய குறிப்புகள் மூலம் கொடுத்திருக்கிறார்.
அதிலும் அந்த கார்டினல் பறவை பற்றிய குறிப்புகள் எல்லாம் அற்புதம்.
பிரவீன் செய்த காரியத்தை எண்ணி அதிர்ந்து போன போது அந்த நிமிடம் முதல் அத்தியாயத்தின் நாட்டாமை என் கண்முன்னே தோன்றி மறைந்தார். ஒருவர் மேல் வைக்கும் காதல் எது நடந்தாலும் மாறாது என்பதை அந்த சம்பவத்துக்கு பின் மனோவா எபநேசரின் நடத்தையில் உணர்த்தி இருக்கிறார். அது தானே காதல் கொண்டவனின் மனம். அப்படித்தானே இருக்க வேண்டும். அந்த இடத்தில் உங்களை மனமார பாராட்டினேன் ஷோபா.
வெகுநாட்களுக்குப் பிறகு மனதில் அழுத்தமாக பதிந்த கதை...கதாப்பாத்திரங்களோடு பயணிப்பதை நிறுத்த முடியாமல் இன்னமும் அவர்களுடனே தொடர்ந்து கொண்டிருக்கிறேன். மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷோபா.

Happy reading.