chitrasaraswathi
Member
- Joined
- Mar 22, 2026
- Messages
- 26
- Thread Author
- #1
தேவி மனோகரனின் பார்த்திபன் காதலி எனது பார்வையில். இதற்கு முந்தைய கதை பிரிய பிரபஞ்சமேவின் தொடர்ச்சியாக பிரபஞ்சனின் நண்பன் பார்த்திபனின் காதல் கதை. பிரபஞ்சன் காதல் மனைவி பிரியதர்ஷினியின் தோழி பார்கவி பார்த்திபனை விரும்புகிறாள். பார்த்திபன் தன் பெற்றோர் முடிவு செய்த பிரபாவதியுடன் திருமணம் நிச்சயம் செய்து திருமணத்திற்கு காத்திருக்கும் காலத்தில் பார்கவி தன் விருப்பத்தை சொல்லிவிடுகிறாள். ஆனாலும் தன் பெற்றோர் தேர்ந்தெடுக்கப்பட்ட மாப்பிள்ளையைத் திருமணம் செய்து கொள்ள சம்மதம் தெரிவித்துவிடுகிறாள். இருவரின் திருமணம் எப்படி நடந்தது என்பதை தேவி மனோகரன் தனது சிறப்பாக காதல் சொல்லும் காட்சிகளுடன் அழகாக தந்திருக்கிறார். சத்யபாமா தனது மாமியார் கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்திருக்கிறார். பிரபஞ்சன் மற்றும் பார்த்திபன் நட்பு, பிரியதர்ஷினி , பார்கவி நட்பும் இரு இணைகளின் காதலையும் தனது சிறப்பான எழுத்தில் சுவாரசியமாக தந்திருக்கிறார். திரி கமெண்டில்.