- Joined
- Feb 15, 2026
- Messages
- 36
- Thread Author
- #11
கவிதையுடன் வாழ்த்துகாலை நேரம்
கதை படிக்கிறேன்
காபியுடன்
காதலுடன்....
கன மழையிலும்
காணும் இயற்கை
கடக்கும் மண்வாசனை
காபி நறுமணம் வீசி
கலந்து இதமாக
கவரும் விதமாக....
காதல் காற்றாய் கன்னத்தில் தழுவ,
காலை காபி
கைகளில் நின்றது....
கண்கள் கூறாத கதைகள் கூட
கப்பில் கரையும்
காபி வாசம் போல....
கசப்பும் கலந்து கொண்டதே நின்
காதல் கதையில்...
காபியின் சுவை
கற்றுக் கொடுத்த பாடம்.
காதல்
கதையிலும் சுவை கூட்டுதே....
கதைக்காக
காத்திருக்கும் கணங்கள் கூட
காபி குடிக்கும் நேரம் போல இனிமை.....
காதலும் காபியும் கலந்து விட்டால்,
காலமும் கூட கைகோர்த்து நின்றுவிடும் நின்
கதைகளோடு…
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்![]()
![]()
![]()
