• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

பிரிய பிரபஞ்சமே ! 22

Ashoka Hema

Member
Joined
Feb 18, 2026
Messages
38
ஹலோ மக்களே 🥰

மாமியார் is always a மாமியார்! யாரெல்லாம் ஒத்துக்குவீங்க ?

அதேபோல அவன் கால ஒடச்சுத்தான் அவளுக்கு ஞானம் வரணும், பார்த்தி அண்ணன் ஆகணும்ன்னா என்னைக்கோ இத செஞ்சிருப்பான் பிரபஞ்சன் :rolleyes:

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே ! 🤩

@Devi Manogaran @Sindhu Narayanan @priya saravanan @Priya Srikanth @Padma Subramanian @Janavi @Narmadha mf @Sathya Velusamy
 
ஹலோ மக்களே 🥰

மாமியார் is always a மாமியார்! யாரெல்லாம் ஒத்துக்குவீங்க ?

அதேபோல அவன் கால ஒடச்சுத்தான் அவளுக்கு ஞானம் வரணும், பார்த்தி அண்ணன் ஆகணும்ன்னா என்னைக்கோ இத செஞ்சிருப்பான் பிரபஞ்சன் :rolleyes:

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே !
மாமியார் எப்பவும் மாமியார் தான். பொண்ணுக்கு நல்ல அம்மாவா இருக்கும் யாருமே மருமகளுக்கு நல்ல மாமியாராய் இருப்பதில்லை. சிலருக்கு மட்டுமே அந்த குடுப்பினை அமையும்.

ரெண்டு பேருக்கும் நடந்தது எதிர்பாராத விபத்து. புரிந்து கொள்ள கிடைத்த சந்தர்ப்பம். இவன் கல்யாணம் நிச்சயம் ஆன உடனே தன் காதலை அவளிடம் சொல்லி இருந்தால் இத்தனை துயரம் இல்லை. சொல்லாத காதல் அவளிடம் செல்லாமலே போய் விட்டது.

அவளும் கொஞ்சம் உணர்ந்து இருக்கலாம். சிறு பிள்ளையாய் மிஸ், அவங்க பையன் என்றே இன்னமும் இருக்கிறாள். இப்போதேனும் புரிந்து தெளிந்து விட்டாளே.
 

நான் தாய் மாமாவை திருமணம் செய்ததால் இன்று வரை மாமியார் பற்றிய அனுபவம் சொந்தத்தில் இல்லை சிஸ்டர்.... என்னை சமாளிக்குறதே அவங்களுக்கு பெரிய கொடுமை தான் 🤣😝.​


சரி சரி விசயத்துக்கு வருகிறேன்.. மரகதவல்லி தான் செய்த தவறை தன் மருமகள் செய்ய கூடாது என்று நினைப்பது தவறு இல்லை தான் 🤷🤷, அவர் காட்டாத பாசத்தை அக்கறையை மருமகள் காட்ட வேண்டும், வேலைக்கு சென்று தேவைக்கு பணம் சம்பாதிக்க ஓடிய அவரால் மகன் மீது அக்கறையும் அன்பும் முழுமையாக காட்ட முடியாமல் போனது போல் மருமகள் தவித்து விட கூடாது போன்ற அவரது சிந்தனைகள் எல்லாம் அவரின் மனதின் வலி மற்றும் காயத்தின் ஏக்கத்தின் சுவடுகள். 😓😓😓


எல்லாம் நன் முறையில் அவர் வாழ்கை வசந்தமாய் இழப்புகள் இன்றி வாழ்ந்து இருந்தால் அவரின் நிலையில் மாற்றம் நிச்சயம் இருந்திருக்கும்.​


அவர் கொண்ட மன அழுத்தமும் அவரது கருத்துக்கு செவி சாய்க்க வேண்டும் என்ற ஒரு வித அழுத்தம் தான் சமயலில் அவர் கோட்பாடுகள், கட்டுப்பாடுகள் என்று தோன்றுகிறது..​


மருமகள் உறவை உறவு முறையில் அழைத்து பல படுத்தும் போது அவரும் பலா பழம் தான்...​


எனக்கு படித்த வரையில் ஆசிரியருக்கே உரிய நிமிர்வும் அவரது பாதுகாப்புக்காக ஏற்ற கண்டிப்பான முக மூடியும் அழகு தான் இருப்பினும் அவரது இயல்பை மீட்டெடுக்கும் உறவு தான் அவரின் ஏக்கதிற்கு மருந்து நிச்சயம் அது அவள் மருமகள் தான்... கால போக்கில் பிரியா வேலைக்கு செல்ல விரும்பாத அவரது மனநிலையும் மாறும்...​


மாற்றம் ஒன்றே மாறாதது நிச்சயம் கணக்கு ஆசிரியரும் மன மாற்றம் பெறுவார் என்பது என்னுடைய கணக்கு(நானும் ரவுடி தான் 😝😝அதாவது கணித ஆசிரியர் தான் 😒😒)​


பிரபா விருப்பியது கொஞ்சம் அறிவு திறன் அதிகம் நிறைந்த பெண்🤷🤷 அதே போல பிரபாவும் ப்ரியா எல்லாம் அறிந்து தெளிந்து அவளாகவே காதலை உணரணும் என்று நினைக்கும் அறிவொளி தான் 🤦🤦இவர்களுக்கு மேல் அந்த தூது புறா பார்த்திபன் 🤦🤦🤦🤦🤦🤦....​

 
ஹலோ மக்களே 🥰

மாமியார் is always a மாமியார்! யாரெல்லாம் ஒத்துக்குவீங்க ?

அதேபோல அவன் கால ஒடச்சுத்தான் அவளுக்கு ஞானம் வரணும், பார்த்தி அண்ணன் ஆகணும்ன்னா என்னைக்கோ இத செஞ்சிருப்பான் பிரபஞ்சன் :rolleyes:

உங்கள் கருத்துக்களை பதிவிடுங்கள் மக்களே ! 🤩

@Devi Manogaran @Sindhu Narayanan @priya saravanan @Priya Srikanth @Padma Subramanian @Janavi @Narmadha mf @Sathya Velusamy
பொத்தாம் பொதுவா மாமியார் always மாமியார்னு நான் சொல்ல மாட்டேன்.....என் மாமியார் விதி விலக்கு... மரகதவல்லி டீச்சர் மாமியாரா என்ன நினைக்கிறாங்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியலை....ஒவ்வொரு முறை வேற வேற மாதிரி நடக்கிறாங்க....


ப்ரியாக்கு ஏன் ஞானம் வரனும்....
முன்னாடி இருந்தே எனக்கு உன்னை பிடிக்கும் ப்ரியானு ஒரு வார்த்தை சொல்லி இருந்தா இவ்வளவு பிரச்சினை இல்லையே....
லவ்னு ஒரு genre க்குள்ள போகாத பொண்ணு arranged marriage பண்ணவ அவ புருஷனுக்கு கல்யாணத்துக்கு முன்னாடியே அவளை பிடிக்கும்னு எப்படி தெரியும்....அவன் நடந்திக்கிறத வைத்து பொண்டாட்டி மேல அன்பா அக்கறையா பாசமா இருக்கான்னு சந்தோஷபடதானே செஞ்சா..... அதை தாண்டி அவ ஏன் யோசிக்கனும்...

ப்ரியா மாதிரி பொண்ணுங்களுக்கு tube light , மக்கு , ஞான சூன்யம் அப்படி என்ன பேர் வெச்சாலும் எனக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை...Priya is right in my opinion
 
மாமியார் எப்பவும் மாமியார்?, இதுக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலையே!!..

ஆனா டீச்சர் ரொம்பவும் மாமியாரா தான் இருக்காங்க🤣🤣🤣!!..

ஆனால் பிரியாக்கு எதுவுமே சொல்லாம அவளுக்கு எப்படி தெரியும், அவளுக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லாம, அவ எப்படி அந்த மாதிரி யோசிக்க முடியும்??..

இந்த பிரபா கொஞ்சம் ஓவரா தான் போறான்🤣
 
Back
Top