மழைச் சாரல் இருவரையும் தீண்டி சிலிர்க்க செய்தது.
பூவையின் மேனி குளிரில் நடுங்க, பிரபஞ்சனோடு மேலும் ஒன்றினாள் பிரியதர்ஷினி.
“மழை பெய்யுது பிரபா”
“பிரபாவ ஹக் பண்ணிக்கோ, குளிராது பிரியா” என்று கிசுகிசுத்தான். அவளின் இரு கரமும் அவன் முதுகில் படர, அவனை இறுக அணைத்தாள்.
தன்னிரு கரத்தாலும் மேலும் அவளைத் தன்னோடு இறுக்கினான்.
“ஐ மிஸ்டு அஸ்” என்றான், ஆழ மூச்சிழுத்து.
“பிராடு பிரபா நீங்க” என்றாள் வெட்கத்துடன்.
“பின்ன என்ன.. ஹக், கிஸ், மிச்ச சொச்சம்லாம் கணக்குல வராது செல்லம்” என்று கிசுகிசுத்தான்.
“அய்யோடா” அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவன் மார்பில் புதைந்தாள்.
மழை இருவரையும் மொத்தமாக நனைக்க, “உள்ள வா, மழையில நனைஞ்சு உனக்குச் சேராம போயிட போகுது” என்று அவளைப் பிரித்தான்.
அவள் விழிகள் மெல்ல அவனில் பதிய, “சேராமயா?” என்று கண்ணைச் சுருக்கி கேட்டாள்.
“ம்ம், ஆனா சேர்ந்தா சரியா போயிடும்” என்றான் குறுநகையுடன்.
“என்னது சேர்ந்தாவா? ஃபர்ஸ்ட் சீக்கிரமா ரூமுக்குள்ள போகலாம்” என்று குளிரையும் மழையையும் குறிப்பிட்டு அவள் சொன்னதை அவன் வேறாக அர்த்தம் எடுத்துக் கொண்டான்.
“ஹாஹாஹா சீக்கிரமாவா அப்படிங்கற?” இடையோடு அவளைச் சேர்த்து இறுக்கி, வெட்கத்தில் சிவந்த முகத்தை முத்தங்களால் மேலும் சிவக்க வைத்தான்.
“நீ நாள் முழுக்கச் சேலையைக் கட்டிட்டு என்னை ரொம்ப டெம்ப்ட் பண்ணிட்ட” என்று அவள் காதில் கிசுகிசுத்தான். அவன் கைகள் அத்துமீற, “அச்சோ பால்கனி திறந்திருக்கு. என் சேலை பிரபா..” என்று நழுவிய சேலையைப் பற்ற முயன்று தோற்று அவன் மார்பில் தஞ்சமடைந்தாள்.
அவளை அணைத்தவாறே அப்படியே திரும்பினான். இப்போது அவள் அறைக்குள் இருந்தாள்.
பால்கனி கதவை மூடாமல் திரைச்சீலைகளை மட்டும் இழுத்து விட்டு அறையை இருளில் மூழ்கடித்தான்.
விடிவிளக்கு வெளிச்சத்தில் தேவதையாய் அவன் கண்களுக்குத் தெரிந்தாள் மனைவி. சட்டெனக் குனிந்து அவளைக் கையில் அள்ளப் போனான்.
“ஐயோ உங்க காலு… என் வெயிட் தாங்க மாட்டீங்க நீங்க?” என்று பதறி துள்ளி தள்ளி நின்றாள்.
“யாரு நான் உன் வெயிட்ட தாங்க மாட்டேன்? நீயே என்னைத் தாங்கும் போது..”
“அய்யோடா பிரபா. கொஞ்சம் சென்சார் போடுங்க”
“செல்லத்துக்குக் கூச்சமா? கொல்ற பிரியா” குனிந்து அவளின் விரிந்த கூந்தலில் விரல் நுழைத்து முகம் நிமிர்த்தினான். அவன் கழுத்தில் கரம் கோர்த்து இழுத்து இருவரின் இதழ்களையும் இணைந்திருந்தாள் அவள். முதலில் லேசாக இனிமையாய் அதிர்ந்து பின் முத்தத்தில் புன்னகைத்தான் அவன். மொத்தமாய் அவளிடம் கரைந்தான்.
மழை நனைத்த அவள் மேனியெங்கும் முத்தத்தின் ஈரத்தால் மேலும் நனைய செய்தான். இருவரின் கால்களும் தள்ளாட ஒருவரையொருவர் தாங்கி படுக்கையில் விழுந்திருந்தார்கள்.
“உங்க கால் பிரபா, கவனம். வலிக்கப் போகுது” அந்நேரமும் அவள் கவனமெல்லாம் காதலாய், கரிசனத்துடன் கணவன் மேலிருக்க, “இதுக்கு மேல உன்கிட்ட இருந்து என்னால தள்ளி இருக்க முடியாது பிரியா. பிளீஸ், என் கண்ணை மட்டும் பாரு. எனக்குக் கால் வலிக்கல. ஓகே?” என்றான் முயன்று வருவித்த நிதான குரலில். மோகம் நிறைந்த அந்த அடர்ந்த குரலில் கிறங்கி கண் மூடித் திறந்தாள்.
மழைத் தூறலை போல, ஒரு மெல்லிய பூவை போல, பட்டுத் துணியைப் போல மிக மிக மென்மையாக அவளைக் கையாண்டான். முத்தத்தை அவளின் பாதத்தில் இருந்துதான் தொடங்கினான்.
மெட்டி அணிந்த விரல்கள், மெல்லிய கொலுசு சிணுங்கிய பாதங்களுக்குப் போட்டியாக அவளும் சிணுங்கினாள்.
அவன் விழி தீண்டலில் மயங்கினாள் அவள்.
காதல் கணத்தில், “பிர..பஞ்..சன்” என்று திக்கி திணறி உச்சரித்தாள்.
அவன் உதடுகளில் மந்தகாசப் புன்னகை, கண்களில் மயக்கம் கூட மனைவியை முழுதாகத் தன் வசப்படுத்தினான்.
அவள் கழுத்தில் கரம் கோர்த்து முகத்தை நெருக்கத்தில் இழுத்து, “இப்போ சொல்லு பிரியா.. இப்போ சொல்லு பிரியதர்ஷினி..” என்று கரகரத்த குரலில் கிசுகிசுத்தான்.
விடிவிளக்கு வெளிச்சத்தில் பளபளத்த அவன் கண்களைக் கூர்ந்தாள். அவள் இதழ்கள் தாமாகப் பிரிந்து மென்மையாக மயக்கத்துடன் புன்னகைத்தன. அதன் பிரதிபலிப்பு அவன் முகத்திலும் வந்தது. லேசாகக் குனிந்து அவளின் நெற்றி முட்டினான். ஒருவரையொருவர் தழுவி இருந்த கரங்கள் இறுக்கம் கூட்ட, தானாக இருவருக்கும் சிரிப்பு வந்தது.
இந்த நிலையில் யாராவது சிரிப்பார்களா? என்று கண்ணால் வினவி மேலும் சிரித்தார்கள்.
“இப்போ சொல்லு பிரியதர்ஷினி” ஹஸ்கி குரலில் சிரமப்பட்டுச் சொன்னான்.
“என்ன பிரபா சொல்ல?” மயக்கத்தில் மூளை ஸ்தம்பித்திருக்கக் கணவனின் பேச்சு புரியவில்லை பாவைக்கு.
“ஐ.. லவ்.. யூ.. பிரியதர்ஷினி..” ஒவ்வொரு வார்த்தையை உச்சரித்து முடிக்கையிலும் மனைவியின் இதழில் இறகின் மென்மையோடு முத்தமிட்டான்.
“ஹா..” ஆழ மூச்செடுத்து, “ஐ லவ் யூ பிரபஞ்சன்” என்று ஒரே மூச்சில் சொல்லியிருந்தாள்.
“ஃபைனலி” என்று நெஞ்சம் நெகிழ அவன் உன்மத்தம் கொண்டு பிதற்ற, அவன் உதடுகளைத் தன் வசமாக்கியிருந்தாள் அவள். முழுதாய் மயங்கி முயங்கினான்.
மென்மையாய் வன்மை கூட்டி, வன்மையிலும் மென்மையைக் கடைப்பிடித்து அவளை முழுமையாக்கினான்.
அவர்கள் முத்தத்தில் முடிவுரையை எழுதி முடிக்கையில் இருவரின் மூச்சும் இரண்டற கலந்து காற்றாகியது.
அறைக்கு வெளியே மழை வலுத்திருக்க, அறைக்குள் மோக மழை தணிந்து, காதல் மழை கரை உடைத்திருந்தது.
பிரியதர்ஷினி இன்ப மயக்கத்தை உதறி எழுந்து, அந்நிலையிலும் அவன் காலை பரிசோதித்தாள்.
“உங்களுக்குக் கால் வலி இல்லையே பிரபா”
“இல்லன்னு சொன்னா என்னா பண்ணுவியாம்?” மல்லாந்து கண் சிமிட்டி அவன் கேட்க, குனிந்து ஈரமாய் அவனது காயம் பட்ட காலில் முத்தமிட்டாள்.
“சோதிக்காத செல்லமே” என்று இழுத்து அவளை மார்பில் போட்டுக் கொண்டான். மெதுவாகத் தன் காலால் அவன் காலை வருடி கொண்டேயிருந்தவள் அப்படியே ஆழ்ந்த உறக்கத்தில் அமிழ்ந்திருந்தாள்.
மனைவியின் சீரான மூச்சு அவன் மார்போடு எழுந்து அடங்கியது. அவளின் முகத்தை மறைத்த முடிக் கற்றைகளை ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டவன், எக்கி அவள் கன்னத்தில் அழுத்தமாய் முத்தம் பதித்தான்.
பிரபஞ்சனுக்குப் பிரியத்தின் நெருக்கம் எத்தனை கிடைத்தாலும் போதாதுதான். தன் நெஞ்சில் அவளைத் தாங்கியபடி அவனும் நித்திரையில் ஆழ்ந்தான்.
நள்ளிரவை கடந்த பொழுதில் மழையின் வேகம் கூடியது. மழைக்கும் இரவுக்கும் என்ன தொடர்பெனத் தெரியவில்லை. எப்போதும் மழையின் வேகம் இரவில்தான் அதிகரிக்கிறது.
அறையின் பால்கனி கதவு திறந்திருக்க, மழை அலட்டிக் கொள்ளாமல் அவர்களின் அறைக்குள் பிரவேசித்திருந்தது.
அதனால் அறையின் சில்லிப்புக் கூடியது. அவள் கனமான போர்வைக்குள் சுருண்டு, கணவனை ஒண்டினாள். அப்போதும் அவளுக்குக் குளிரின் தாக்கம் குறையவில்லை. அதில் அவளின் உறக்கம் கலைய, அவசரமாக எழுந்து உடையைத் தேடினாள். அவர்களைப் போலவே அவர்களின் உடையும் கலந்து, நனைந்து கிடந்தது.
அப்போது அவளின் கண்ணில் பட்டது பிரபஞ்சனின் ஜெர்சி. மின்னல் வேகத்தில் ஓடி அதை எடுத்து அணிந்து மீண்டும் படுக்கைக்கு வந்தாள்.
அவள் படுக்கையில் விழுந்த அதிர்வில் பிரபஞ்சன் கண் விழித்து, “பிரியா” என்று உறக்கம் சுமந்த கண்களைச் சிமிட்டி அவளைப் பார்த்தான். ‘மிஸ்டர் பி’ பெயர் பொறித்த அவனது சட்டையில் இருந்தாள், மறுகணம் முழுதாய் விரிந்தது அவன் கண்கள்.
“செல்லமே..” என்று நீண்டதொரு சீட்டி அடித்தான்.
அவனை விளையாட்டாக இடித்து, “தூங்குங்க” என்று உதடு சுழித்தாள்.
“தூங்கிடுவோம்” என்று சோம்பலாகச் சொல்லி, அவளைத் தனக்குள் இழுத்து அவளுள் கரைந்து, கணங்கள் தோறும் காதல் பேசினான்.
மறுநாள் இருவருக்கும் மிகத் தாமதமாகத்தான் விடிந்தது.