இந்த வாழ்வென்பது – 19 (1)

தலைவனின் தோட்டத்தில் மல்லிகையைப் பறித்ததும் உடனே சரம் தொடுக்கக் கொடுத்து விட மாட்டார்கள். அதைக் குளிர்ந்த நீரில் நன்றாக அமிழ்த்தி எடுத்துப் பின்னரே சரம் தொடுக்கக் கொண்டு செல்வார்கள்.

அப்படிக் குளிர்ந்த நீரில் மலர்களை அமிழ்த்தி எடுக்கையில் அவன் கை உணரும் குளுமையையும், மலரின் மென்மையையும் இப்பொழுது ஒருசேர உணர்ந்தான் தர்மதுரை.

மனைவியைக் கட்டிக் கொண்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனுக்கு, எங்கோ கோழி கூவும் சத்தம் கேட்டது. பசுக்கள் கழுத்து மணியசைய நடந்து சென்றன.

பொழுது புலரத் தொடங்கியதின்‌ அறிகுறியாகப் புள்ளினங்கள் இசைக்கத் தொடங்கியிருந்தன‌. அந்தச் சத்தத்தில் மெதுவாகக் கண் திறந்தவன், அப்போதுதான் மீண்டும் உறங்கி விட்டதையே உணர்ந்தான். அவன் மார்பில் கரம் பதித்து ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த மனைவியை மென்நகையுடன் பார்த்தவன், பட்டென்று பார்வையைத் திருப்பிக் கொண்டான்.

இன்றைக்கு இதற்கு மேல் அவனால் தாமதிக்க முடியாது. மனைவியை ரசித்தால், அவ்வளவுதான் என்று தனக்குள் ரசனையாய் சொல்லியபடி, மனைவியின் உறக்கம் கலைக்காமல் விலகி எழுந்து கொண்டான்.

அவர்களுக்குத் திருமணமான நாளில் இருந்து அவன் அதிகாலையில் தோட்டத்திற்குச் செல்லவில்லை.

“ஒரு வாரத்துக்கு மாமா பார்த்துக்குவாங்க மாப்ள. அது போக நம்ம பசங்க இருக்காங்க. நீ பொறுமையா எட்டு மணிக்கு மேல தோட்டத்துக்குப் போனா போதும்” என்று மாமா லோகேஷ்வரன் அவனிடம் சொல்லி விட்டார். அதுதான் பெரியவர்களின் விருப்பமாகவும் இருக்கும் என்பதால் அவன் மறுக்கவில்லை.

அவர்களுக்குத் திருமணமான இரவே தனிமை கொடுத்து புது வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். மற்ற அனைவரும் எப்போதும் போலப் பழைய வீட்டில் இருந்து கொண்டார்கள்.

அந்தப் புது வீடு கட்டி நான்கு வருடங்களுக்கு மேலாகிறது. பண்டிகை, திருவிழா, விஷேச நாள்களில் உறவினர் கூடும் போது மட்டுமே அங்குப் புழங்குவார்கள்.

அப்பத்தா பழைய வீட்டை விட்டு நகர மாட்டேன் என்றதால் இப்போதும் அனைவரும் அங்குதான் இருப்பார்கள்.

புதுமணத் தம்பதிகளுக்குத் தனிமை தர வேண்டி அவர்களைப் புது வீட்டுக்கு அனுப்பி விட்டார்கள். அவர்களும் உறங்க மட்டுமே அங்கு வருவது. காலை எழுந்ததும் பெரிய வீட்டுக்கு சென்று விடுவார்கள்.

மூன்று நாள்கள் இப்படிச் சென்றிருக்க, இன்றாவது அதிகாலை எழுந்து தோட்டத்திற்குச் செல்ல வேண்டும் என்று திட்டமிட்டிருந்தான். ம்ம், எங்கே முடிந்தது?

அவன் குளித்து வெளிவர, கதவைத் திறந்த சத்தத்தில் மெல்ல விழித்தாள் தேன்மொழி.

இடையில் துண்டும், வெற்று மார்புமாக நின்றவனை மெல்ல விழி திறந்து பார்த்தவள், மென்மையாகப் புன்னகைத்தாள்.

“எழுப்பிட்டேனா?” படுக்கையில் அவள் காலடியில் அமர்ந்து கேட்டான். மறுப்பாகத் தலையசைத்தாள்.

“தோட்டத்துக்குப் போறீங்களா? மணி என்ன? காஃபி போட்டு தரவா?” உறக்கம் சுமந்த குரலில் கேட்டாள், அந்தக் குரலே அவனைக் கிறக்கியது. நிதானமாக அவளை நெருங்கினான்.

தேன்மொழி கிளுக்கிச் சிரித்து, “தள்ளி போங்க தர்மா” சில்லென்று இருந்த அவன் மார்பில் கை பதித்து அவனைப் பின்னால் தள்ளினாள்.

“குளிச்சு ஃப்ரெஷ்ஷா இருக்கீங்க, உங்க தோட்டத்து பூ மாதிரி. அப்புறம் நான் கசக்கிட்டேன்னு கண்ண கசக்கக் கூடாது” அவன் மார்பில் விரலால் கோலமிட்டு, விழியால் அவனை விழுங்கி அவள் சொல்ல, ஒரே இழுப்பில் அவளைத் தூக்கி மடியில் கிடத்தியிருந்தான்.

“சிலுப்பி, என்ன சொன்ன? என்னைய என்ன பண்ண போறேன்னு சொன்ன? பண்ணு பார்ப்போம்” என்று அவள் கழுத்தில் கரம் கோர்த்துத் தன்னை நோக்கி இழுத்து கேட்டான். மனைவி சொன்னதை நினைக்க நினைக்க அவனுக்கு அப்படியொரு சிரிப்பு. முன்தினம் மாலை அவன் சொன்னதைத்தான் அப்படியே திருப்பிச் சொல்லியிருந்தாள் மனைவி. ரசனையும், சிரிப்புமாக அவளை வளைத்துக் கொண்டான்.

“என்ன பண்ணணும்? அதான் நீங்களே”

“அடியேய்..” அவனுக்கு வெட்கம் வந்து தொலைத்தது. அவன் முகத்தில் படர்ந்த மெலிதான வெட்கத்தையும், அவன் தலையைப் பின்னுக்கு இழுத்துச் சத்தமாகச் சிரிப்பதையும் மயக்கத்துடன் பார்த்தவள், எட்டி அவன் தாடையில் அழுந்த முத்தமிட்டாள்.

ஆழ்ந்த மூச்செடுத்து அவள் கழுத்தில் முகம் புதைத்து, தன்னை ஒப்புக் கொடுத்தான்.

“நான் உன்னைய பூ போல ஹேண்டில் பண்ணியிருக்கேன். ஆனா, நீ என்ன பண்ணியிருக்கன்னு நீயே பாரு” என்று அவள் காது மடலில் முத்தமிட்டுச் சொன்னான்.

“என்ன பண்ணேன்?” அவன் கண்களை ஏறிட்டு கேட்டாள்.

அவளின் கைப் பிடித்துத் தன் கழுத்து, மார்பு, முதுகு என அவன் வருடிக் கொண்டே போக, அவன் உடல் முழுக்க அவள் தடங்கள் அழுத்தமாகப் பதிந்திருந்தது.

“அச்சோ சாரி” என்று அவன் வலியை நீக்குவது போல, தலைவனின் தாடை, கன்னம், மீசை என அழுத்தமாக இதழொற்றியவள், “நீங்க குளிச்சிட்டீங்க” என்று அவன் காதில் கிசுகிசுத்தாள்.

“பூ வாடுனாலே நான் தாங்க மாட்டேன். இதுல பொண்டாட்டி வாடுனா அம்புட்டுதென். நீ முத்தத்தைக் கன்டினியூ பண்ணு. நான் இன்னொருக்கா குளிச்சுக்கறேன்” மோகத்தில் கரகரத்தது அவன் குரல்.

“பூவும் வாடல, உங்க பொண்டாட்டியும் வாடல. ரொம்பதான் ஆசை தர்மருக்கு” இரண்டு கையையும் அவன் மார்பில் பதித்து அவனைப் படுக்கையில் தள்ளி விட்டு எழுந்து ஓடினாள்.

“அடியே” என்று கத்தியவன், மீசையைப் பிடித்திழுத்து, காற்றில் அவனுக்கு முத்தம் கொடுத்து, குளியல் அறைக்குள் புகுந்துக் கொண்டாள்.

அவனும் சிரிப்புடன் எழுந்து படுக்கையைச் சீர் செய்து, உடை மாற்றித் தயாரானான்.

தேன்மொழியும் குளித்து வந்து தயாராகவும், இருவரும் பெரிய வீட்டுக்குச் சென்றார்கள்.

“வா, ராசா. திலகா, பேரன் வந்துட்டான் பாரு. காப்பிக் கொண்டா” கூடத்தில் வாசலைப் பார்த்து அமர்ந்திருந்த அப்பத்தா, அவர்களைப் பார்த்ததும் உள்நோக்கி குரல் கொடுத்தார்.

“என்ன அம்மாச்சி, உனக்கு இப்போதான் கோழி கூவுச்சா?” என்று அவரை வம்புக்கிழுத்தாள் தேன்மொழி. அவளைக் கண்டாலே ஏதாவது சொல்லிடுவார். இன்றைக்கு அவரை முந்திக் கொண்டாள் அவள்.

“நான் எழுந்து கொள்ள நேரமாச்சு” என்றார் கழுத்தை ஒடித்து.

“குளிச்சாப்ல தெரியலையே”

“நான் என்னத்துக்கு..” என்று ராகம் போட்டு ஆரம்பித்தவர், பேரன் பொண்டாட்டி எனவும் அடக்கி வாசித்தார். அப்படியே அதை முடிக்காமல் வாய் மூடிக் கொண்டார்.

அவளுக்குச் சிரிப்பு வந்து தொலைத்தது.

“என்னா அம்மாச்சி, சொல்ல வந்தத சொல்லி முடிக்காம முழுங்கறீங்க. எனக்குப் பயமா?”

“ஏதே பயமா? அதுவும் உன்னைய பார்த்தா? பேரன் பொண்டாட்டின்னு..” என்று குரல் உயர்த்திச் சொன்னவர், பேரனின் பார்வையைப் பார்த்ததும், “ஏ திலகா, உம் மருமவளுக்குக் காப்பிய கொண்டா” என்று பம்மினார்.

“தேங்க்யூ” என்றாள் தேன்மொழி புன்னகையுடன்.

“ம்க்கும்.” என்று நொடித்துக் கொண்டார்.

இருவரின் பேச்சையும் கேட்டபடி சென்று குளிர்சாதனப் பெட்டியை திறந்து, முன்தினம் மாலை தொடுத்து வைத்திருந்த மல்லிகையை மனைவியிடம் நீட்டினான்.

நெருங்கத் தொடுத்திருந்த மல்லிகை, எப்படியும் இரண்டு முழம் இருக்கும்.

error: Content is protected !!
Scroll to Top