• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

இந்த வாழ்வென்பது_கவிக்குயிலின் கவி விமர்சனம்

Joined
Feb 20, 2026
Messages
52
#இந்த வாழ்வென்பது...

#தேவி மனோகரன்

#திருமதிஅப்சரஸ்பீனா_லோகநாதன்

#கவிக்குயிலின்_கவி _ விமர்சனம்



இருப்பதை இழந்து
இன்பத்தை தொலைத்து
இன்னல்கள் கண்டு
இனி முடியாது என நினைக்கும் போது
இதோ உனக்கான வாழ்க்கை
இறுகப் பற்றிக் கொள்
இயைந்து தரும்.....

இன்பமோ துன்பமோ
இதுவும் கடந்து போகும் என்று
இயன்றவரை எளிதாக கடக்கும் போது
இன்பமும்
இனிமையும்
இருகரம் நீட்டும்.....
இது போதும் எனக்கு என
இதயம் நினைக்கும்....

இது என்ன வாழ்க்கை இப்படி ஒரு நரகமாக தோன்றுவதில்
இருந்து...
இப்படியே போகுமா இந்த வாழ்க்கை என்று தொடங்கி
இது தான் வாழ்க்கை
இதற்கு தான் காத்திருந்தேன் என்பது போல
இது தான் வாழ்க்கை என்று சொர்க்கமாய் தோன்ற வைக்கும்....


பெற்றவர்களை இழந்து
பெரும் துன்பத்தில்
உடன் பிறந்தவுடன்
உயிராக இருக்க
பார்க்க பிடிக்காத விதி
பிரித்து விட...

அக்கா தம்பி
அங்கும் இங்கும்
ஆளுக்கொரு பக்கம்
ஆசை ஏக்கம் மட்டும்
அன்பில் இருக்க.....

தீயவர்கள் இல்லை
தீதும் இல்லை
தீராத சோகம் பிரிவு
தான்....
தங்கள் நிலை எண்ணி
தவித்தாலும்
தம்பி உடன்
தான் சேர்ந்து வாழும் வாழ்வுக்கு
துடிக்கும் அக்கா....

பெற்றவர்கள் தான் இல்லை
பெரியவர்களாக ஆச்சியும்
பெரியம்மா பெரியப்பா
பெரிய அண்ணன்கள் பிரியமுடன் அனைவரும் இருக்க
பிரிந்திருக்கும் தம்பியிடம் என்ற தான்
பாசமும் பரிவும் ஏங்கி நிற்கிறது....


அன்பின் தம்பியும்
அன்புவின் அக்காவும்
அன்பாக இணைந்தால்
அன்பு அல்ல பேரன்புபோ....

எதிர்பார்ப்புகள்
என்றும் தீர்வத்தில்லை
பெற்றவர்களை எதிர் பார்த்து
பிரிந்த தம்பியை எதிர்பார்த்து
புது வாழ்வை எதிர்பார்த்தும் பிள்ளைகளை எதிர்பார்த்து என பெண்களின் எதிர்பார்ப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது....
எதிர்பார்ப்பு முழுமை பெறும் இடம் குடும்பம்..

தேனின் எதிர்பார்ப்பு முழுமை பெற்றதே இந்த வாழ்வென்பது....

பூவில் இருக்கும்
தேன் இனிமை தான் ஆனால் முட்கள் மேல் சிரித்து
பூத்திருப்பது போல...

தேனின் மனதிலும் உள்ள காதல்
அவள் வாழ்வின் துயரங்களை கடந்து கரம் பிடித்த துரையின் காதலில் அழகாய் வாழ்வு பூத்து குலுங்கிறது....


பூ கொடுக்க யோசிப்பவன்
பூந்தோட்டமே வைத்து தருகிறான்.....
பூ பறிக்க சென்ற தேன் மனதை பறித்த பூந்தோட்டக்காரன்...

பூ கொடுத்தே
பாவை மனதை பறித்துவிட்டான் புன்னகை மாமன்....

பிரிவில் தொடங்கி
பாசப் பிணைப்பில்
பிடித்து வைத்திருக்கிறது
இந்த வாழ்வென்பது...


தங்கையின் வாழ்வில்
தங்களின் பாசத்தை
தாய்மாமன் சண்டையில்
தெரிய வைக்கும் அண்ணன்கள்
தம்பியின் உரிமை
தாறுமாறு....

உடன் பிறப்புகள்
தேன்மொழி, அன்பழகன்
தர்மதுரை அன்புக்கரசி
சுதாகரன் ஜெயபாலன்
பத்மா சரவணன்.....

ஜோடிகள்
தர்மா 💖 தேனு
பூவிழி, சேரன்,செழியன்

அன்புக்கரசி❤️ லோகேஷ்வரன் ரோஜாக்குட்டி

சுதாகரன்🩵 ரம்யா
ஜெயபாலன் 💛பத்மா
அன்பழகன்💕 சந்தியா

ஆச்சி தாத்தா
பெரியம்மா பெரியப்பா தாய் மாமன்
அத்தை என
அனைத்து உறவுகளும் அவர்களின் பாசமும் அளப்பரியது....
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻

"அடேய் அன்பே" என்று அணைப்பதும்
அண்ணனின் அரவணைப்பில் இருந்து
அன்பு .....
"விடே என்னையே" என்று சிணுங்கி விலகுவதும் அழகு.....

தர்மா.... என கொஞ்சி தேனாக தேனு அழைப்பதும்
சிலுப்பி என கெஞ்சி
சிணுங்கும் மாமன் துரையும்
காதலின் சின்னங்கள்....

மொத்தமாய் துன்பத்தை தந்தாலும்
இந்த வாழ்வென்பது
இன்னல்களுக்கு இடையில்
உறவுகளுக்கு மத்தியில்
இன்பத்தையும் அள்ளி அள்ளி தருகிறது.💐💐💐💐

வாழ்வில் எதிர்மறையாக நடந்தாலும்
சுற்றமும்
சூழலும் எந்த சூழ்நிலையிலும் நேர்ம
றையாய் இருந்தால்
சாபமாக இருந்த வாழ்வு
வரமாக மாறும்
இந்த வாழ்வென்பது சுகமே.....💖💖💖💖


அருமை மா 👏🏻 👏🏻 👏🏻 👏🏻 வாழ்த்துக்கள் 💐💐💐💐💐



 
Back
Top