Narmadha mf
New member
- Joined
- Mar 8, 2026
- Messages
- 16
- Thread Author
- #1
காதலை வெவ்வேறு மொழியில், வண்ணங்களில், பல்வேறு வடிவங்களில் வெளிப்படுத்தினாலும் அதன் ஜீவநாடி மாசில்லாத அன்பு மட்டுமே 

.இக்கதையிலும் மௌனத்தின் மொழியில் இதழ் விரியா நகைப்பில், ஒளிரும் பார்வையில் வெளிப்படுத்திய தலைவனின் காதலை பல்வேறு சோதனையின் முடிவில் உள்ளார்ந்து உணர்ந்து தலைவி ஆர்பரிக்கும் போது உள்ளம் கனிந்து உருகியது



.
சஹானா :கடவுள் தேசத்தில் இயற்கை அன்னையின் மடியில் தவழ்ந்து விளையாடும் அருவி போன்ற ஆர்ப்பரிப்பும் ஆனந்தமும் கொண்டு ரசனையின் மழலையாய் துள்ளி திரிந்த தேவதை.
பல்வேறு இயற்கை பரிமாணத்தை மனித மனங்களின் பரிமாணத்தை அனுபவ அறிவால் அறிந்து தெளிந்து நின்ற அறிவு மங்கை தன் முதல் சந்திப்பில் தாயின் திருவிளையாடலில் உள்ளத்தில் ஊடுருவியவன் மீதான பிடித்தம் கடவுளின் திருவினையாக்கும் நிகழ்வில் திருமண மாலை சூடிய போது அவனது வாய்மொழி பிடித்ததின் அளவை அறியாமல் அறியாமையில் தவித்தது கவலை அளித்தது.
ஒவ்வொரு நாளும் புதுமையாக தெரியும் கணவனின் மீதான அன்பு அதிகரித்தாலும் அவனது தாயின் தேள் கொடுக்கு போன்ற அவ சொல்லில் துவண்டு மருகி அமைதியை ஆயுதமாய் கொண்டு வெற்றிவாகை சூடியவள் புயலாய் மையம் கொண்டு கரையை கடந்து சிதறி தாயின் கூட்டில் அடைக்கலம் கொண்டது வேதனையை கொடுத்தது.
தாயின் போதனையில் வேதனை மறந்து கணவனின் மெய் அன்பை புரிந்து தெளிந்து தனது தவறையும் அறிந்து காதலின் உருகி மன்னவன் தோளில் நிரந்தரமாக பொன் மாலையாகியது இதயத்தை இதமாக்கியது 





.
சக்தியமூர்த்தி :நிமிர்வும் கம்பிரமும் கொண்டு விவேகத்தில் சிறந்து விளங்கிய நல் ஆண்மகன். பேச்சை காட்டிலும் செயலில் வீரனாய் வெற்றி கனியை பறித்து ஆர்ப்பாட்டம் இல்லாத தோரணையில் உள்ளம் நெகிழவும் செய்தான்.
மனம் கவர்ந்த பெண்ணவளை மன உறுதியுடன் பெற்றோர் சம்மதத்துடன் சமாதானம் செய்து கைபிடித்து மகிழ்ந்தவன் நிலை கண்டு ரசிப்பு பொங்கியது...
எல்லாம் சரியே தன்னுடைய அன்பை வார்த்தைகள் இன்றி செயலில் புரிந்து மனம் கவர்ந்தவள் செயல் படுவாள் என்று அசட்டையாக இருந்து அவளது கோபத்தில் தன் கோட்டையை கோட்டைவிட்டது அறிந்து துடித்தது என்ன சொல்ல 
மௌன சாமிகளுக்கு இது தேவை தான் என்று தோன்றியது 



.
தன் மனைவியின் மரியாதையை தாய் ஆகினும் அவரிடம் வாதிட்டு பெற்று தந்தும் மனையிடத்தும் உறவுகளின் மரியாதையை எடுத்து கூறி நடுநிலையான மனப்பான்மையுடன் குடும்ப மேன்மையை நிலை நிறுத்தியவன் குணம் மனதை நெகிழ்ச்சி அடைய செய்தது 

..
தன் இயல்பை தன் மகவின் வரவில் வெளிப்படுத்தி தந்தையாய் புது பரிமாணம் கொண்டு மகிழ்ச்சி கடலில் தத்தளித்தவன் நேசம் சந்தோசத்தை கொடுத்தது 



.
சஹானாவின் சக்தியமூர்த்தி என்றும் காதலுடன் ஊடலுடன் ரசனையுடன் ரசிக்க வைப்பான் என்பது நிதர்சனமான உண்மை.. 



.
வாழ்க வளமுடன்
