நிரஞ்சனாவின்
நிறம் கருமை என்றாலும்
நிழல் போல
நிமலன் மனதில் நின்றாள் அவள்...
நினைவுகளில் நனைந்து கொண்ட காதலை
நிசப்தமாக கவிதைகளில் நேசித்தான் அவன்...
நேரில் சொல்லத் தெரியாமல்
நுணுக்கமான சொற்களில் நுழைந்தான் அவன் நினைவை...
நோயாய் வந்த காதல் கூட
நெஞ்சை நெருப்பாக்கி காய்ச்சலாய் மாற்றியது...