• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎
  • "A cup of stories - காஃபியின் முதல் சுவை" READERS CONTEST - June edition. Check in Discussion thread.
  • "பார்த்திபன் காதலி" கதையை வாசிக்கத் தளத்தில் ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள் டியர்ஸ்.

A cup of Stories - காஃபியின் முதல் சுவை! வாசகர்களுக்கான போட்டி!

மழையோடு ஒரு நாள் ..தேவா & பல்லவி இவங்க தான் உங்க கதையை படைக்க ஆர்வத்தை தூண்டியவங்க.
இந்த தமிழ் நாவல் ரைட்டர தளத்தைல்,நான் படித்த உங்களின் முதல் கதை.
உங்க எழுத்து நடையில் கவரபட்டு தான் படிக்க ஆரம்பித்தேன்.
அதன் பிறகு எந்த கதைனு சரியா நினைவில்லை,கமெண்ட் செய்தேன்.நீங்களும் பதிலளித்து,உங்களின் பதிலால் ரொம்ப மகிழ்ச்சயடைந்தேன்.
உங்க கதைல தர்மதுரையும்,பிரபாகரும் என் பேவரிட் நாயகர்கள்.
நாளுக்கு நாள் உங்க எழத்து நடை ரொம்பவே அழகாகிட்டே வருது,அதுவும் காதல் சொட்ட சொட்ட..
இப்போ சமீபமா பார்த்திபனின் காதலி வேற லெவல்.
எப்படினு விரிவா சொல்ல தெரியல ஏதோ ஒரு அழகான வித்தியாசமான எழத்து நடை உங்களோடது..
எனக்கு ஆடியோ நாவலை விட கதைகளை படிக்கவே விருப்பம்.❤️

இன்னும் அழகான காதல் கதைகளை எழுதி மென்மேலும் வளர வாழ்த்துக்கள் தேவி டியர்
 
ஊஞ்சலாடும் மனது.

கதையோட தலைப்பு எனக்கு ஒரு உந்துதல கொடுத்துச்சு. ஆமால மனசு ஊஞ்சலாடும் தானே. இப்படினா அப்படி யோசிக்கும், அப்படினா இப்படி யோசிக்கும். முன்ன பின்ன நம்ம எண்ணங்கள் மாறுபட்டுக்கிட்டு தான் இருக்கும். சரி, இந்தக் கதையில அப்படி என்ன இருக்குன்னு படிக்க ஆரம்பிச்சேன். ஒரு காலேஜ் ரீயூனியன். அந்த செட் பசங்க. அவங்க வாழ்க்கை. கல்லூரி காலம் முளைத்த காதல், நட்பு, அன்பு, பகை, தயக்கம், விருப்பம், பொய், உண்மை எல்லாம் அவங்க ரீயூனியன் அப்போ எப்படி மாறியிருந்ததுனு, எனக்கு ரொம்பவே பிடிச்சது. அதுல ஒவ்வொரு கேரக்டரும் ஒவ்வொரு விதம், மீனாக்ஷி pair - காதல் கல்யாணத்துக்கு முன், பின். மது pair சொல்லாத காதல் ஓவியம் மூலமா சொல்றது, வீரா ஸ்பாயில்ட் சைல்ட் அவனோட முரட்டு தனமான லவ். மலர் சாப்ட் கேர்ள் அவளோட பயம், ஒரு பையன் இரு பெண் தோழிகள் அவங்களுக்குள்ள நடக்குற அன்பின் மாற்றம் அதன் மூலமா நடக்குற குழப்பம்,பிரிவு. ஒரு ஸ்டோரிக்குள்ள நிறைய எமோஷன்ஸ். யார்ரா இது இப்படி எழுதிருக்காங்கனு உங்க பேர் பார்த்தேன். இப்படி தான் எனக்கு தேவி மனோகரன் பெயர் தெரியும். அந்த சமயம் தான் மந்தமாருதன் ongoing வந்துச்சு. அது வரைக்கும் முடிஞ்ச கதையை தான் படிப்பேன், அது தான் முதல் முறை ஒரு கதையை ஒவ்வொரு அத்தியாயமா நான் படிக்கிறது. முதல் வாசிப்பு என்னை ரொம்ப ஈர்த்ததால உங்க அடுத்த கதையும் படிக்க ஆரம்பிச்சேன். வீரா ஸ்பாயில்ட் சைல்ட் கதை. ரொம்ப ஆர்வமாகிடுச்சி. அதுல ஒரு சீன், மலர் வீரா கடையில பூ வாங்கிட்டு போவா, வீரா பின்னாடியே போவான். அவ சிக்னல பயந்து நிக்க அது எனக்கு அப்படியே படமா கண்ணுல வந்துச்சு. "When strangers make you feel close" அந்த உணர்வு 'ப்பா' அப்படி இருந்தது. ஏதோ ஒரு "soul connection" ரொம்ப அபூர்வம் அந்த மாதிரி நடக்கிறது. முத தடவை கமெண்ட் பண்ணேன். சைலண்ட் ரீடர் நானு, கூட்டுக்குள்ள இருந்து வெளி வந்தேன். நீங்களும் பரிச்சியம் ஆனீங்க. Stranger to sweet sister. உங்களை பார்த்தது இல்ல, but எப்பவாவது சந்திக்க சந்தர்ப்பம் கிடைச்சா நீங்க சொல்லாமலேயே உங்கள கண்டுபிடிச்சிடுவேனு நினைக்கிறேன்.
 
Back
Top