• Welcome to KadhaiCafe ☕ Where every page carries a story and every story leaves an aroma.
    Make your காஃபி நேரம், கதை நேரம். சுடச் சுட காஃபி, சிறு சிறு கதை, பெரிய பெரிய எமோஷன் ☕📖🤎

அவள் கானலா!!!

Joined
Mar 18, 2026
Messages
2
தமிழ் எழுத்தில் முதல் எழுத்து உயிர் பெற்றது உன்னால்....

இதழ் விரித்த மலர் அனைத்தும் பெயர் பெற்றது பெண்பால்......

பெண்ணவளை கவிதை ஆக்க இலக்கணத்திலும் வார்த்தை இல்லை கண்ணவளே கவிக்குள் அடைக்க சிறு பொருளும் அவள் இல்லை .........

மனையாளும் மனவாட்டியால் அரண்மனையாள முடியாதா......

திருமணம் எனும் போர்வையில் கயிறுக்குள் அகப்படுவாளா......

தரணி ஆள்பவள் நானென்று எழுந்து நின்று போராடு.......

தடைகள் சொல்வது யார் இங்கு அறுத்து எறிந்திடு வேரோடு.......

கொதி வைத்த நெற்கதிராய் பரிந்து விளைய துடிக்கிறாள்.....

பகலவன் பணி அனைத்தும் மதிமுகமே செய்து முடிக்கிறாள்......

மஞ்சள் தேய்த்த முகத்தில் மீசை வளரத் துடிக்கும் .......

கூந்தல் பின்னல் இடுக்கில் அகிலம் அடங்கி கிடக்கும்......

அறிவைப் பருவத்தில் சேயை பெறுவதற்கு......
மங்கை பருவம் முதலில் உதிரம் இழக்கிறாள்.....

விதியை உடைத்து மதியை வளர்த்து உன் உரிமைக்கு உயிர் கொடு.......

என் அடிமை எனும் செறுபகைகள் நமக்கு நீர் மேல் போட்ட கோடு.....

காரணம் இன்றி அச்சப்பட்டு கானல் நீராய் கரையாதே......

மரணமே மிச்சம் என்று காட்டித் தீயாய் எரிந்திடு.....


இவள் பாரதி.
 
Back
Top