இடைவெளி 2(1)

“சது ப்ளீஸ், என்னைப் பாரு” என்று பரசுராம் கெஞ்சலாக சொல்ல, சாதனா அவனை நிமிர்ந்து பார்த்தாள்.

“எனக்கு ஹிந்தி தெரியாது, இவங்ககிட்ட சொல்லதெரியாம நீ சாப்பிடுறதயே கேட்டுட்டேன். இப்போ ரொம்ப பசிக்குது, ஆனா இது சுத்தமா பிடிக்கல. எனக்கு வேற சொல்லு சது” என்று பாவமாக முகத்தை வைத்துக் கேட்க, சாதனாவால் மறுக்க முடியவில்லை.

அவனிடம் பதில் சொல்லாமல் ஹோம்ஸ்டேவின் பெண்மணியை அழைத்து பூரியும் கிழங்கும் கொண்டு வர செய்தாள். சூடான பூரிகள் அவன் முன் வைக்கப் பட பூரித்துப் போனவன் மூன்று பூரி உள்ளே போனதும் தான் முன்னே இருந்தவளைப் பார்த்தான்.

“ஆமா, நீ என்ன சாப்பிடுற?” என்று கேட்க,

“baked potatoes with cream and chicken, pomegranate mojito” என்றதும் பரசுராம் விழித்தான்.

‘உருளைக்கிழங்கு கோழி மசாலான்னு சிம்பிளா சொல்றாளா பாரேன். எட்டாயிரம் இதுக்குதானாயா?’ என்று மெல்ல முணுமுணுத்தவன் அந்த ஹோம்ஸ்டேவின் ஓனரை மனத்தில் கடுப்புடன் பார்த்து வைத்தான்.

“இதையும் சேர்த்து சாப்பிடு சது, வேஸ்ட் ஆகிடும்.” என்று மனைவியிடம் சொல்ல

“பூரி சாப்பிட்டு இதை சாப்பிடுங்க, சிக்கன் அண்ட் போட்டேட்டோதான்.” என்றாள் முறைப்பாக.

 எப்படியோ பசிக்கு வாங்கியதை எல்லாம் உண்டு முடித்தான் பரசு. உண்ணும்போது பேசினால் சதுவுக்குப் பிடிக்காது என்பதால் சாப்பிடவுடன்,

“ஏன் சது டைவர்ஸ் கொடுக்கிற அளவுக்கு என்னை வெறுத்துட்டியா? இல்லை வாழ்ற அளவுக்கு என் மேல விருப்பமே வரலையா? ஒரு நாள், சில நிமிஷம் கோவம் அதுக்காக இப்படியா?” தாங்கலாக பரசுராம் கேட்கவும் ஒரு நிமிடம் அமைதியாக இருந்தவள்

“அந்த சில  நிமிஷம் கோவத்தை இரண்டு மாசமா என்னால மறக்க முடியலயே, என்ன செய்றது ராம்? அந்த கோவமான பேச்சு கேட்கக் கூடாதுனு தான் இவ்வளவு தூரம் வந்தேன், இங்கேயும் வந்துட்டீங்க?” சது கணவனை சரமாரியாகக் கேள்விகள் கேட்டவள் இருக்குமிடம் உணர்ந்து,

“எனக்குப் பப்ளிக்ல சீன் கீரியேட் பண்ணினா பிடிக்காதுனு உங்களுக்குத் தெரியும்தானே? எதுனாலும் என் ரூம்க்கு வந்து பேசுங்க. ஃப்ர்ஸ்ட் ஃப்ளோர் செகண்ட் ரூம் ஆன் ரைட்” என்று சொல்லி சாதனா எழுந்து போய்விட, இவனும் அவள் பின்னே போனான்.

சாதனாவின் அறையும் அவனுடையது போலவே நல்ல வசதி, விசாலமும் கூட. அவள் அறை பால்கனி வழியே பார்க்க, ஹிமாச்சலின் மலைகள் அவ்வளவு அழகாய் வெண்பனியை சுமந்து திரண்டு வானின்  நீலப்பிண்ணனியில்  சொர்க்கம்!! அந்த இயற்கை எழிலில் மனைவியை அணைத்து நிற்க ஏங்கிய அகத்தை அடக்கியவன்,

“சது, உனக்கு எப்படியோ இரண்டு மாசமா நீ இல்லாம ரொம்ப ரொம்ப கஷ்டமா இருந்தது. ஒரே தடவை என்னை மன்னிச்சிடு ப்ளீஸ். அது ரொம்ப தப்பு! ஒத்துக்கிறேன், இனிமே பேச மாட்டேன், அப்படி நடந்தா நீ சொல்றதைக் கேட்கிறேன்” என்று அவளை சமாதானம் செய்யும் வகையில் ராம் பேச, சாதனா இரங்கவில்லை.

 “ராம், எதுனாலும் ஊருக்குப் போய் பேசிக்கலாம். கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகலாம்னு வந்திருக்கேன், என்னை தனியா விடுங்க. இப்போ உங்க ரூம் போங்க” என்றாள் பொறுமையாக.

“சது…!” ராம் ஏக்கத்துடன் பார்க்க,

“ராம் கெட் அவுட்!” கொஞ்சம் குரல் உயர்த்தினாள். ராம் சோகமாக அவன் அறைக்கு வர அவன் அம்மா இந்துவிடமிருந்து அழைப்பு.

“எங்கடா சொல்லாம கொள்ளாம வெளியூர் போய்ட்ட போல இருக்கு? எல்லாம் நாங்களே நியூஸ் பார்த்து தெரிஞ்சிக்கனும் இல்லையா?” என்று அதட்டினார்.

“அம்மா, சதுவோடதான்மா இருக்கேன்” என்றான்.

“ஜீவா தான் போன்ல காட்டினான், ஆனா உனக்கு சொல்லணும்னு தோணலதானே? பெரிய மனுஷன் ஆகிட்ட இல்லை” என்று திட்டியவர் போனை வைத்துவிட்டார்.

அம்மா பேசியதில் வருத்தமாக இருந்தது, ஒருவயதுவரைக்கும் அவனும் அவரும் மிகவும்  நெருக்கம். பின் இவனாகவே விலகிவிட்டான், என்னவோ வருத்தமாக இருந்தது. சதுவின் மறுப்பு, அம்மாவின் பேச்சு எல்லாம் சேர்ந்து. அப்போது சரியாக உதய்யிடம் இருந்து அழைப்பு.

“என்ன மாம்ஸ்? உதவி செஞ்ச இந்த உதய்யை உடனே மறந்துட்டு உங்களை ஏமாத்தின அண்ணனுக்கு எல்லாம் போன் செஞ்சு பேச முடியுது? நான் எல்லாம் சின்ன பையன்னு தானே இப்படி பண்றீங்க?” என்று உதய் உரிமையாக வம்பிழுத்தான்.  

“உன்னைத்தான் டா தேடினேன், மிஸ் யூ மாம்ஸுனு ஏண்டா இன்ஸ்டாவுல ஸ்டோரி போட்ட, அதை ஜீவா பார்த்துட்டான். உன் அண்ணா அந்த செல்வா கூட பார்த்திருப்பான்” என்று ராம் புலம்ப,

“செல்வாவை நான் ஹைட் பண்ணிடுவேன் ஹாஹா, ஹேக் தெரியாத மாமாவா இருக்கீங்களே? என் மாமாவை பிரிஞ்சு இருக்க இந்த ஒருவாரம் எனக்கு ஒரு யுகம்னு நானே சோகத்துல மிஸ்ஸிங்க் மாம்ஸ்னு போஸ்ட் போட்டிருக்கேன். கொஞ்சம் கூட என் அன்பை மதிக்க மாட்டேங்கிறீங்க நீங்க?” என்று உதய் செல்லம் கொஞ்சிட,

“டேய், முடியலடா! இதெல்லாம் என் பொண்டாட்டி செய்ய வேண்டியதுடா, ரொம்ப பண்றீங்கடா நீங்க” என்று பேசும்போதே மாதவனிடமிருந்து போன்.

“இருடா, பெரியவன் வரான். கான் கால் போடுறேன்” என்று மாதவனை அழைப்பில் சேர்த்தான்.

“அக்காவை பேசி சமாளிக்க சொன்னா போன்ல யார்கிட்ட பேசுற நீ?” என்று மிரட்டலாகக் கேட்டான் மாதவன்.

“சது கூட இப்படியெல்லாம் கேட்க மாட்டா டா, உன் தம்பி கிட்டதான் பேசுறேன் மாதவா”

“யோவ் மாமா எங்ககிட்டவே பேசிட்டு இருந்தா எப்போ நீ சாதனாவை சமாதானம் செய்வ? தேற மாட்டார் போலடா இவரு” என்று உதய்யிடம் குறையாக சொன்னான் மாதவன்.

“பேசினேன் பேசினேன், அவ ஸ்டைல்ல வழக்கம்போல கெட் அவுட் சொல்லிட்டா” சலிப்பாக சொன்னான் பரசுராம். 

“மிஸ்டர். பரசுராம்  நீங்க ஒன்னும் அவ ஆபிஸ்ல இருக்க மேனேஜர் பரசுராம் இல்லை, ஹஸ்பண்ட் பரசுராம். அதை ஞாபகம் வைச்சிட்டு இன்னும் பேசுவியா அதைவிட்டு அவ கெட் அவுட் சொன்னா வந்துடுவியா நீ? இடியட்!” என்று திட்டினான் மாதவன்.

“மாம்ஸ் பாவம்ணா, திட்டாத!” உதய் சொல்ல,

“போங்கடா, எல்லோரும் ஒன்னு கூடி திட்டுறீங்க நீங்க. அவ என்னடான்னா பேச போனாலே பேசாதன்னு திட்டுறா. இவன் பேசு பேசுன்னு திட்டுறான்.”

 சரி சரி மாமா, ஃபீல் பண்ணாத விடு! சதுவுக்கு உன்னைப் பிடிக்காம ஒன்னும் கட்டல, பிடிக்காத விஷயத்தை அவ செய்யவே மாட்டா. உன் மேல சாஃப்ட் கார்னர் இருக்கு. ஆனாலும்,  இரண்டு மாசமா என்னத்தான்யா செஞ்ச? ஒரு முன்னேற்றமும் இல்லை” என்று கடுப்பாகக் கேட்டான் மாதவன்.

“என்ன செஞ்சிருப்பாரு? அக்காவை ஆபிஸ்ல சைட் அடிச்சிட்டு இருந்தவர் வீட்லயும் ஜாலியா சைட் அடிச்சிருப்பார், அக்கா என்ன சொன்னாலும் ஓகே சது பண்ணிடலாம்னு சொல்லியிருப்பார்.” என்றான் உதய் கிண்டலாக.

“போடாங்க்!” என்றான் பரசு கடுப்பாக.

“இந்த பேச்செல்லாம் எங்ககிட்டதான் மாமா உனக்கு, சது கிட்ட போய் உன் வீரத்தைக் காட்டேன்” என்று ஏற்றிவிட்டான் மாதவன்.

“டேய் என் மேல தப்புடா, தேவையில்லாம பேசினது நான்.  அவ அதுக்கே டென்ஷன் ஆகி டைவர்ஸ் நோட்டீஸ் விட்டுட்டான்னு பயங்கர கடுப்புல இருக்கேன், நீங்க வேற.” என்று பரசு சொல்ல.,

“மாமா, விடு! அப்படியெல்லாம் சது டைவர்ஸ் பண்ணமாட்டா உன்னை. நாங்க விட்டுடுவோமா? எங்க பரசுமாமா மாதிரி யார் கிடைப்பா” என்று மாதவ் ஆறுதலாகப் பேச,

“அட போங்கடா! அவ என்னைப் பார்த்து ஒரு ரியாக்ஷனும் கொடுக்க மாட்டேங்கிறா, இந்த உதய் பய என்னை மிஸ் பண்றேன்னு சொல்றான், இரண்டு மாசம் ஆகுது. உங்கக்கா ஒன்னுமே பேசல”

“போனது போகட்டும் , புறப்படு புயலே!!  எழுந்திரு, அக்கா கால்ல விழுந்திரு!” என்று உதய் கூவினான்.

“மவனே வந்தேன், வாயுல உதைச்சேன்னா வங்காள விரிகுடாவுல விழுவ” என்று பரசு திட்ட

“அப்போ மார்ல மிதிச்சா மால்தீவ்ஸ்ல விழுவான்னா மாமா?” மாதவன் கிண்டலாகக் கேட்க

“உங்களை எல்லாம்?? மச்சானா போய்ட்டீங்கடா இல்லைனா”

“இல்லைன்னா என்ன மாம்ஸ்?” உதய் கேட்டதற்கு மாதவனும்

“இல்லைனா  என்ன மாமா?” ராகமாய் இழுத்தான்.

அவர்கள் இழுத்த தோரணையில் எதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயத்தில் “அதான் இல்லையேடா, விடுங்க. எனக்குப் பாடி தாங்காது இதுக்கு மேல.” ராம் சொன்னதில் பாவம் பார்த்து விட்ட மாதவன்

“பேசாம சதுவை ஃப்ர்ஸ்ட் டைம் பார்க்கிறதா நினைச்சு அழகா ப்ரோபோஸ் பண்ணு மாமா. சென்று வென்று வா” என்று வாழ்த்தினான்.

“சரிடா வென்று” என்று பரசு பல்லைக் கடிக்க,

“என்னதூ?”

“வென்று வரேன் டா” என்றான் அழுகுரலில்.

“ஹாஹா, மாமா பார்த்துக்கோ. எதுனாலும் கூப்பிடு. பை” என்று சொல்லி மாதவன் வைத்துவிட்டான்.

உதய் கால்’லை கட் செய்யாது,  “மாமா, அக்கா போன் பண்ணினா,  நாந்தான் உங்களுக்கு அவ அங்க இருக்கான்னு சொல்லிட்டேன்னு செம திட்டு” என்றான் பாவமாக. 

“அச்சோ, ரொம்ப திட்டினாளா?” என்று பரசுராமும் பாவமாகக் கேட்க,

“திட்டினாதான், ஆனாலும்,  உங்களுக்காக வாங்கிக்கிட்டேன் மாமா” என்று தியாகியாகப் பேச குளிர்ந்து போனான் ராம்.

“உதய், நீ வயசுல சின்னவனாலும் பெரிய மனுஷண்டா” என்று பாராட்ட,

“அதெல்லாம் வேண்டாம், எனக்கு ஒரு தவுஸண்ட் டூ ஹன்ரட் என் ப்ரண்ட் அக்கவுண்ட்ல போட்டுவிடுங்க மாமா. அரீயர் ஃபீஸ் கட்டனும்” என்றதும்

“டேய்!! இதுக்குதான் வலை விரிச்சியா?” என்று பரசு கடுப்பாக கேட்டான்.

error: Content is protected !!
Scroll to Top