அவள் வீட்டில் தாத்தாவையும் சித்தப்பாவையும் தவிர வேறு பெரியவர்கள் இல்லை. அவளால் அவர்களிடம் தன் மன வருத்தங்களை பகிர முடியவில்லை. அதுவும் மூன்று தம்பிகளுக்கு அக்காவாக அவள் நடக்க, கம்பெனி பொறுப்பேற்ற பின் அதில் கவனம் வைக்க, தோழமை எல்லாம் அவளுக்குப் பெரிதாக இல்லை.
இப்போது யோசிக்க யோசிக்க மனதின் பாரம் ஏறியது. என்ன முன்பென்றால் மனதுள் வைப்பவள் இப்போது அதை ராமிடம் பகிர்ந்து விட்டாள்.
சாதனாவை இன்னும் அணைத்துக்கொண்ட ராம், அவள் கன்னம் வருடி “எனக்குத் தெரிஞ்ச சாதனா எல்லார்கிட்டவும் அவ்வளவு ஈசியா மனசுல உள்ளதை ஷேர் பண்ண மாட்டா. அவளுக்கே அவளைப் பார்த்துக்க தெரியும். அப்படி இருக்க என் சது எங்கிட்ட அவ மனசுல உள்ளதை ஓபனா ஷேர் பண்றதே பெரிய விஷயம். கல்யாணமான இத்தனை மாசத்துல சண்டை தவிர ஓபனா நம்ம பேசுற விஷயம் இதானே சது?” என்று கேட்டான்.
சாதனாவுக்கு ராமின் பார்வையில் தான் எப்போதுமே பிடித்தவளாக தெரிகிறோம் என்பதில் ஒரு சந்தோஷம். அதைத் தாண்டி பெருமை! கூடவே கூடியது அவன் மீதான காதலும்!!
“நான் அப்பா அம்மாவை ரொம்ப மிஸ் பண்றேன் ராம். அக்சுவலி நாங்க ரொம்ப ஹாப்பி ஃபேமிலி, சித்தி இல்லைன்றது மட்டும்தான் எங்களோட கவலை. அதுவும் உதய் அவன் அம்மாவைப் பார்த்ததே இல்லைல, ஷி பாஸ்ட் அவே டுரிங் டெலிவரி. ஸோ என் அம்மாதான் அவனை வளர்த்தாங்க. எல்லோருக்கும் அவன் செல்லம், ஆனா அம்மா அப்பா ஆக்சிடெண்ட்ல போனதும் தாத்தா, பாட்டி எல்லாருமே ரொம்ப உடைஞ்சு போய்ட்டாங்க. சித்தப்பா அவர் சித்தி போனதுமே ரொம்ப குடிக்க ஆரம்பிச்சார், அவரால அந்த இழப்புல இருந்து வெளிவர முடியவே இல்லை. அதுக்கு அவர் முயற்சி செய்யவும் இல்லை, அவசியம் இருந்தா கூட வந்திருப்பாரோ தெரியல”
“ஏன்னா அப்பாவும் அம்மாவும் உதய்யை வேறயா பார்க்கல. ஏன் மாதவனை கூட அப்படித்தான். நாங்க நாலு பேரும் எந்த வேறுபாடு இல்லாமதான் வளர்ந்தோம். அம்மா அப்பா போனதும் எனக்கு தனிமை அதிகமாச்சு, வயசான தாத்தா பாட்டி சின்ன தம்பிங்கனு எனக்கும் மாதவனுக்கும் ஒரு ப்ரஷர். அப்புறம் காலேஜ், ஹாப்பியான டேய்ஸ்ல” என்று கேட்டு அவனைப் பார்க்க, அவன் கண்கள் மின்னின.
“ரொம்ப ரொம்ப ஹாப்பியான டேய்ஸ்” என்றான் ராம்.
“ஆனா எனக்கு ப்ரதீப்போட ரிலேஷன்ஷிப் செட் ஆகல, அவனோட எனக்கு ஒத்துப்போகல. வயசுக்கோளாறு போலனு நானே விட்டேன், கொஞ்ச நாள் கஷ்டமா இருந்தது, அப்புறம் அதுவும் கடந்து போயிடுச்சு. அப்புறம் எல்லாம் பிஸீனஸ், ஃபேமிலி. அப்பா அம்மா இருந்திருந்தா சீக்கிரம் மேரேஜ் செஞ்சிருப்பேனோ தெரியல, இப்ப லேட் டிவெண்டிஸ் வரை தனியா இருந்துட்டு உங்களோட ஒட்டவே முடியலையோனு கவலையா இருக்கு.”
“நெக்ஸ்ட் நீங்க, நம்ம கல்யாணம். பிடிச்சுத்தான் பண்ணினேன், ஆனா அன்னிக்கு நீங்க பேசுனது..” என்றவள்
“சாரி ராம், இதான் ப்ராப்ளம்! ஸ்மூத்தாவே எனக்கு வாழ வரல பாருங்களேன். நீங்க அவ்வளவு சாரி கேட்டும் சொல்லிக்காட்டுறேன்” என்று கையை வைத்துத் தலையில் அடிக்கப்போனவளின் கையைப் பிடித்தவன் அதற்கு முத்தமிட்டான்.
“இதெல்லாம் சொல்லிக்காட்டாதவங்களே கிடையாது! அண்ட் எப்பவும் எதுக்காகவும் நம்ம சுயமரியாதையை இழக்கவே கூடாது சது, எனக்காக கூட! அன்னிக்கு நான் நடந்துகிட்டது, பேசினது எல்லாம் தப்பு, அதுக்கு நீ கோச்சுக்கிட்டு விட்டு வந்தது தப்பு இல்லை, என்ன ஒன்னு என்னையும் கூட அழைச்சிட்டு வந்திருக்கலாம்” என்றான் கடைசியில் கிண்டலாக.
“கோச்சுக்கிட்டு இருக்கப்ப உங்களையும் அழைச்சிட்டு வருவேனா? லூசா நீங்க?” என்று ராமை சாதனா திட்ட
“ஆமா கோவத்துல இருக்கப்பலாம் என் கொமட்டுல குத்தியிருக்கலாம் உன் கோவமும் போயிருக்கும். எப்படி?” என்று அவன் பார்க்க,
“லவ் யூ ராம்” என்று அவன் கழுத்தைக் கட்டிக்கொண்டாள்.
அவள் தலையை வாஞ்சையாகப் பிடித்தவன் முகத்தில் வாத்சல்யம் கொட்டிக்கிடந்தது. காதல், இச்சை எல்லாம் மீகிய ஒரு உணர்வு, நிறைவாக அவளைப் பார்த்திருந்தான்.
“ஓட்டவே முடியலன்னு இப்படி ஒட்டிட்டு இருக்க சதும்மா நீ!” என்று ரசனையாக சொன்னவன்,
“எந்த ஒரு ரிலேஷன்ஷிப்பும் பெர்ஃபெக்ட் கிடையாது. அண்ட் late marriage is better than wrong marriage. எப்ப செய்றோம்னு மேட்டர் கிடையாது, ஒரு ரிலேஷின்ஷிப்புக்குத் தேவை intimacy, passion, commitment. நான் உன் மேல பேஷனோடதான் இருக்கேன், நீயும் இருப்ப. அண்ட் நம்ம இரண்டு பேருமே கமிட்டட்! மேரேஜ் நிலைச்சு நிக்க ஒரு வழி சொல்லவா, you have to fall again and again in love for a successful marriage. அதே நேரம் மரியாதை ஒரு உறவுக்குள்ள மனசார இருந்ததுன்னா அதுவே அந்த உறவை நிலைக்க வைக்கும்!”
“அன்னிக்கு நீ செஞ்சது சரி! நான் உன்னைத் தனியா விட்டு தேடாம இருந்த காரணம், நான் நடந்த விதம் சரியானதோ மரியாதையானதோ கிடையாது. நீ அதையெல்லாம் ரொம்ப யோசிக்காத, நம்ம இப்போதான் சேர்ந்து வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம் சில மேடு பள்ளமெல்லாம் வரும். கைப்பிடிச்சுட்டு கடந்து போயிடுவோம்” என்றான் அவள் கைகளை மெல்ல வருடியபடி.
“ஐ ஃபீல் அட் ஹோம் ராம்!” என்றாள் சாதனா கண்கலங்க. அவள் சரியாக இருக்கலாம், அவன் செயல்தான் அன்று தவறு! ஆனால், அதை ஒத்துக்கொள்ள ஒரு பக்குவம் வேண்டுமே? மனதளவில் ஒத்துக்கொண்டாலும் அதை மனைவியிடம் ஒப்புக்கொள்ள காதல் எல்லாம் தாண்டி ஒரு மரியாதை வேண்டும். அவளின் எண்ணத்தை மதித்தல் வேண்டும்! அதை செவ்வனே செய்யும் அவன்பால் அன்பால் சாயவே தோன்றியது தத்தைக்கு.
“பேசிட்டே இருந்துட்டோம், நீ கவலைப்படாம தூங்கு” என்று அவன் அமைதியாக கண்மூட,
“ஏதோ கேப் இல்லைனு சொன்ன மாதிரி இருந்தது”
சாதனாவின் முணுமுணுப்பில் ராம் கண்களைத் திறவாமல் ரகசிய குரலில், “நாளைக்கு ஈவினிங்க்ல இருந்து மூணு நாள் கஸோல்’ல நமக்கு ஹனிமூன். பர்த்டே கிஃப்ட்னு செல்வாவும் மாதவனும் சொன்னாங்க.” என்றான் சிரிப்பை அடக்கியபடி.
“ஓஹ் இன்னிக்குக் கரடி வேலை பார்த்ததுக்கு காம்பன்சேட் பண்றானுங்களா?” என்றவள்
“அப்போ கூட உங்களுக்கு என்னை ஹனிமூன் அழைச்சிட்டுப் போகணும் தோணாதா?” என்று கடுப்போடு கேட்க
“நானே அந்த ப்ளான்ல இருந்தேன், சரி இவனுங்க கிஃப்ட் பண்றதை ஏன் வேண்டாம் சொல்லணும் விட்டேன். மாதவனுக்குக் கல்யாணம் வரப்போகுது, நம்மதான் எல்லாம் செய்யணும். அவன் கல்யாணம் முடிஞ்சதும் மண்டபத்துல இருந்து டைரக்டா கிளம்பிடலாம் ஓகே?” என்று சாதனாவின் சம்மதம் எதிர்ப்பார்த்தான் ராம்.
அவள் புன்னகைக்க, புன்னகையில் புலர்ந்தது அடுத்த தினம்.
காலை உணவு முடியவும் நகரில் (Naggar) இருக்கும் பட்லிகுஹல் பிரிட்ஜ் சென்றனர். இளவேனிற் காலத்தில் இதம் சேர்க்கும் வானிலையில் அவர்கள் மன நிலை மட்டற்ற மகிழ்ச்சியில் இருந்தது. சாதனாவும் ராமும் ஏதோ பேசி சிரித்திருக்க, மாதவனுக்கும் செல்வாவுக்கும் அதைப் பார்த்து பூரண உணர்வு. இருவரின் கண்களும் அவர்களின் அன்யோன்யத்தால் நிறைந்தது.
“டேய் மச்சான்ஸ்! என்னையும் என் சம்சாரத்தையும் ஒரு போட்டோ எடுங்க” என்ற உற்சாகக் குரலில்
“சத்தமில்லாம பேசிட்டு இருந்தவன், இன்னிக்கு சாதனா பக்கத்துல இருக்க சவுண்ட் வுடுறதைப் பார்த்தியா ப்ரோ?” என்று மாதவன் செல்வாவிடம் கேட்க
“அதானே?” என்றான் அவனும்.
“பர்த்டே பேபி கேக்கிறார்ல எடுடா” என்று மாதவனிடம் கேட்டாள் சாதனா.
“சரி சரி” என்று அவனும் எடுத்துக்கொடுக்க, “நீங்களும் வாங்க டா, செல்ஃபி ஒன்னு எடுப்போம்” என்று ராம் அழைக்க, ஜோடியாக அவர்களை சில படம் எடுத்த மாதவன் பின் அவர்களுடன் செல்ஃபி எடுத்தான்.
மாதவன் சாதனாவிடம் “ஹாப்பியா இருக்கியா சது?” என்று கேட்க
“சந்தோஷமா இருக்கேன் டா. உன் ப்ரண்டையும் சந்தோஷமா வைச்சுப்பேன்” என்று சொன்னாள் சாதனா.
“தேங்க்ஸ்” என்று மாதவன் சொல்ல அவனை முறைத்தது “நல்ல தம்பிடா நீ” என்றாள்.
“தேங்க் யூஊஊஉ” என்று பல்லைக் காட்டினான் அவன்.
“போடா!!” என்று சிரித்தாள் சாதனா.
“ஈவினிங் கசோல்’ல உங்களுக்கு ரூம் போட்டிருக்கு, நேத்து ராம்க்காக தான் வந்தோம். ஃப்ர்ஸ்ட் டைம் கல்யாணம் அப்புறம் வர பர்த்டே, அதான். உங்க ப்ரைவசில வந்துட்டோம்னு மிஸ்டேக் பண்ணாத சது” என்று மாதவன் சொல்ல
“ஓவரா பண்ணாதடா, உன் மாப்பிள்ளை நேத்து அவுட் ஆஃப் தி வர்ல்ட்ல இருக்கார். சும்மா சீன் போடு” என்று தம்பியின் தோளில் அடித்தாள்.
அன்று மாதவனும் செல்வாவும் மாலை ஊருக்குப் பயணப்பட, பரசுராமும் சாதனாவும் கசோல் சென்றனர்.
அங்கு சென்றதும் அது புதுவித தனிமையாய் இருந்தது. இவர்கள் மட்டும் இருக்க, இத்தனை நாள் மௌனமாய் இருந்த இடைவெளி இல்லாமல் போய் இசைக்க காத்திருந்தது.
அறையில் ராம் சாதனாவை நெருங்கி அமர்ந்தவன் “அன்னிக்கு நான் நமக்குள்ள இண்டிமெசி வேணும் சொன்னேன் தானே சது” என்றதும்
“ராம், ஐ அம் ஓகே” என்றாள் புன்னகையுடன்.
அவள் நெற்றியில் செல்லமாக முட்டியவன் “இதான் இல்லை, நான் சொன்ன இண்டிமசி இஸ் ட்ரூத்! நம்ம யாரை நம்புறோமோ அவங்ககிட்ட காட்டுற நெருக்கம்தான் இண்டிமெசி, ஜஸ்ட் செக்ஸ் சொல்லல நான். செக்ஸ் வைச்சிக்கிறதும் இண்டிமெட்டா இருக்கறதும் ஒன்னு இல்லை சது” என்றான். ராமை சாதனா புரியாது பார்க்க
“ஏன் இப்படி முழிக்கிற?” என்று கேட்டவன் “இந்த மாணிக்கம் எப்படி பாட்ஷாவானேன் சொல்லப்போறேன்” என்றதும்
“பம்பாய்ல என்ன பண்ணிட்டு இருந்தீங்க?” என்று கேட்டாள் சாதனா.
“பம்பாய் இல்லை பல்லாவரம்” என்று சிரிப்புடன் சொன்னவன் அவனைப் பற்றி சொல்லவும் சாதனாவின் சிரிப்பு மறைந்தது.