இடைவெளி 1(2)

“நாங்க எல்லாம் உன் அபார்ட்மெண்ட் வாசல்ல நிக்கிறோம் மாமா, கீழ வா. ஏர்ப்போர்ட் போகலாம்” என்றதும் பரபரப்பாக கீழே இறங்கினான் பரசுராம். காரினுள் தலையை விட்டு பார்க்க, மாதவனும் உதய் மட்டும் இருந்தனர். பரசு பெருமூச்சுடன்

“டிக்கியைத் திறடா” என்றதும் உதய் இறங்கி சென்று அவனே ட்ராலியை உள்ளே வைத்தான்.

“என்ன மாம்ஸ் பெருமூச்சு?” மாதவன் சிரிக்க

“நல்லவேளை அந்த சேடிஸ்ட் செல்வா வரல, என்ன பேசுறான் அவன்? அவங்கிட்ட சொல்லலதானே நீங்க?” என்று மற்ற இருவரையும் கலவரமாகப் பார்த்தான் ராம்.

“ஹாஹா, இல்லை. பட் அக்காவை பேசி ஜோடியா அழைச்சிட்டு வரணும் மாமா நீ இல்லைனா அவ்வளவுதான்!”

“அவ்வளவுதானா? ஏண்டா அவளை அனுப்பி வைச்சதை சொல்லல, இப்ப என்ன அவ்வளவுதான்..?” என்று முறைத்தான் மாதவன் அருகே உட்கார்ந்தபடி.

“அக்கா மனசே சரியில்லை சொல்லி ஃபீல் பண்றா, நீ நல்லா பார்த்துப்பனு தானே நாங்க கட்டி வைச்சா அவளை நாலே மாசத்தல ஹிமாச்சல் அனுப்பிட்ட நீ”

“டேய் அனுப்பினது  நானா இல்லை நீங்களா?”

“இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை, உங்கக்காவை லவ் பண்றேண்டா, சேர்த்து வைங்கனு அந்த புலம்பல் புலம்பிட்டு இன்னிக்கு நாங்களாம் சேடிஸ்டா?”

“செல்வாவை சொன்னேன்”

“என் தம்பியை சொன்னா என்ன சொன்ன மாதிரி தானே?” என்று மாதவன் கேட்க,

“உங்கக்கா பேசாம என்னை டார்ச்சர் பண்றா, நீங்க அவளுக்கும் சேர்த்து பேசுறீங்க” மாதவன் தாங்கலாகச் சொன்னான்.

“உனக்கு என்னடா? அரேஞ்ச் மேரேஜ் பண்ண போற ஆசாமி நீ! என்னை மாதிரி ஒருத்தியை லவ் பண்ணி வெயிட் பண்ணி பாரு தெரியும்…. அதுவும் உங்க அக்கா மாதிரி ஒரு பொண்ணை தேடி லவ் பண்ணி பாரு, அப்ப தெரியும் என் கஷ்டம்” என்றதும் பின் சீட்டில் இருந்த உதய்,

“மேடீ ண்ணா, வண்டியை திருப்பி விடு. அவ்வளவு கஷ்டம் வேண்டாம் மாம்ஸ்” என்றான்.

“ஹாஹ” என்று மாதவன் சிரிக்க, பரசு உதயைப் பார்த்தவன் 

“ஒரு நேரத்துல ஒருத்தன் அட்டாக் பண்ணுங்கடா, ஓவர் ஆல் அட்டாக் எல்லாம் தாங்குற ஆள் இல்லைடா நான்” என்றான் பாவமாக.

“உதய் கன்னுக்குட்டி, மாமா உன்னை செல்லமா வளர்த்ததுக்கு உதைக்கிறியாப்பா” என்று கேட்க

“ஹாஹா பின்ன என்ன மாம்ஸ்? அக்கா கல்யாணமே வேண்டாம் சொன்னாங்க. நாங்கதானே பரசுராம் நல்லவர், வல்லவர், உன்னை நல்லா பார்த்துப்பார் அப்படி இப்படினு உங்களை பத்தி பேசி பேசி கன்வீன்ஸ் பண்ணினோம். தாத்தா கூட உங்களுக்காக அவகிட்ட பேசினார். அப்படி இருந்தும் ஒரு செமெஸ்டர் கூட தேறலயே  நீங்க” என்றான்.

“தாத்தா! அச்சோ அவர்கிட்ட சொல்லவே இல்லை” என்ற பரசு

“அவரும்தானே பேத்திக்கு சப்போர்ட்டா என்னை அவாய்ட் பண்ணினார், அவரை கொள்ளுதாத்தாவாக்கிட்டு அவரை ஃபேஸ் பண்ணிக்கிறேன்” என்றான் கெத்தாக. பேசியபடி அவர்கள் விமான நிலையம் சென்று பரசுவை விட்டனர். பரசுவை கட்டியணைத்த மாதவன்,

“மாமா, வரும்போது அக்காவோட வரணும். ஹஸ்பண்ட் அண்ட் வைஃப் ப்ரச்சனைகுள்ள நாங்க வரக்கூடாதுன்னு தான் நாங்க ஒன்னுமே கேட்டுக்கல. பட் அக்கா சின்ன விஷயத்துக்கு இவ்வளவு கோவப்படமாட்டா, அப்படியே அவ தப்பா இருந்தாலும் எங்களுக்காக அவளைப் பார்த்துக்கோ” என்றான்.

“ஆமா மாம்ஸ், அப்போதான் அண்ணா கல்யாணம் சீக்கிரம் நடக்கும்! ஆல் தி பெஸ்ட்” என்று உதயும் கட்டிக்கொள்ள, பரசுக்கு நெஞ்சம்  நெகிழ்ந்தது.

“கண்டிப்பா வரும்போது சதுவோடதான் வருவேன்” என்றான்.

“சாதனா அக்காவோட வரது பெருசில்ல மாம்ஸ், சமாதானமா வரணும்”

“சாதனாவை சமாதானம் பண்றதே சாதனைதானேடா, இன்னும் கூட மோட்டிவேஷன் கொடுங்கடா, அவளைப் பார்த்தாலே ஜெர்க் ஆகும் எனக்கு” என்று பரசு சொல்ல

“மாமா, ஒரு ரம்! ஓகேவா?” என்று மெல்லிய குரலில் மாதவன் கேட்க,

“அவ என்னை அந்த பழக்கமெல்லாம் இல்லாதவன் நினைக்கிறாடா. ஒரே ஒரு முறை உங்களோட குடிச்சிட்டேன், அதுவும் நீங்க குடிக்க வைச்சீங்கடா. என்னோட விரதத்தை ப்ளான் பண்ணி கெடுத்தீங்கடா நீங்க” என்று பரசுராம் குற்றம்சுமத்தினான்.

மாதவன் ”மாம்ஸ், உதய் இருக்கான். அடக்கிவாசி” என்றான்.

மச்சான்களிடம் சொல்லிவிட்டு டெல்லிக்கு விமானம் மூலம் சென்றான் பரசுராம்.

அங்கிருந்து குலு மணலிக்கு ஒரு விமானம். பின்  naggarக்கு கார்.  சின்ன விஷயம் என்றாலும் மகிழும்  மனப்பாங்கு  அவனிடம். எல்லாவற்றையும் ஒரு நல்ல கண்ணோட்டத்தில் பார்க்க அவனை பழக்கி இருந்தான். அதனால் மனத்தில் மனைவி விவாகரத்துப் பத்திரம் அனுப்பியும், அந்த கவலையெல்லாம் அகத்தில் இருந்தாலும் சுற்றி இருந்த இயற்கையை ரசித்தான். 

அவன் மனைவி சாதனா இருப்பது ஒரு homestay. வேலை செய்தப்படி இயற்கையின் எழிலை காணலாம்.  நகரின் பரபரப்பு இன்றி இயற்கையுடன் இயைந்தபடி வேலை செய்யலாம். அந்த இடத்திலே உணவு, தங்குமிடம், இணைய வசதி எல்லாம் உண்டு. பயண விரும்பிகளுக்கெனவே ப்ரத்யேகமாக உருவாக்கப்பட்டது.  இவன் அந்த பிரபல ஹோம்ஸ்டேவில் இறங்கி ரூம் புக் செய்ய, அவர்கள் சொன்ன தொகையில் ஒரு சின்ன அதிர்வு அவனிடம்.

அறைக்கு வந்தவன் அவனுக்கு அழைத்த மாதவனிடம்

“ஏண்டா, உங்கக்கா ஒரு ஆர்டினரி இடத்துல எல்லாம் தங்கமாட்டாளா? இவன் ஒரு வாரத்துக்கு எட்டாயிரம் வாங்கிட்டான் எங்கிட்ட” என்று புலம்பினான்.

“யோவ் மாமா, உன்னை எல்லாம் எங்கக்காவுக்குக் கட்டி வைச்சு தப்பு பண்ணிட்டோம். பொண்டாட்டியை கணக்கு பண்ண சொன்னா ரூம் காசை கணக்கு பண்ற, ஒரே நாள்ல எங்கக்கா மனசை மாத்தி ஹனிமூன் சூட் புக் பண்ற வழியைப் பாருய்யா

என்றான் மாதவன் கடுப்பாக. அவன் சொன்னதில் பரசுராமிற்கு மெல்லிய புன்னகை.

“அப்படி இப்படி பேசினாலும் மாமனுக்கு ஐடியா தரதுல உன்னை அடிச்சிக்க ஆளே இல்லைடா மாதவா, தேங்க்ஸ் மச்சான்” என்று பரசுராம் சொல்ல,

“நடிக்காத மாமா, இரக்கமற்ற அரக்கன்னு சொன்னியாமே எங்களை” மாதவனும் விடாது கிண்டல் செய்தான்.

“மாதவா, மச்சான், சிக்னல் வீக்.! அப்புறம் கால் பண்றேன்” என்று சொல்லி வைத்தவன் குளித்து முடித்து குளிருக்கு இதமாக ஸ்வெட்டர் எல்லாம் அணிந்துகொண்டு வெளியே வந்தான். பொழுது விடிந்திருக்க,  அவனது  அறையின் பால்கனியைத் திறந்து பார்க்க எங்கும் மேகமும் மலைத்தொடரும். ஆப்பிள் தோட்டம் சுற்றிலும், வெளியே பார்த்தால் எங்கும் பச்சை நிறம், வெண் புகையாய் மேகத்திரள்.

இயற்கை பக்கம் பார்வை போக  மெல்ல மெல்ல ஒரு அமைதி அவனிடம். எட்டு மணி ஆகிவிட எல்லோருக்கும் உணவு நேரம் அது. உடனே பரபரப்பாக கீழே இறங்கினான் பரசுராம். அவன் நினைத்தது போலவே சாதனா அமைதியாக உட்கார்ந்து உணவு உண்டு கொண்டிருந்தாள். இவனைப் பார்க்கவே இல்லை. இவன் முதலில் சாதனாவைப் பார்த்தான். இருபத்தொன்பது வயது போலவே தெரியவில்லை, இன்னும் சிறு பெண்ணாகத் தெரிந்தாள்.

தலையில் ஸ்கார்ஃப், ஹெட்போன்ஸ். ஹூடி என்று அட்டகாசமாய் இருந்தவளைப் பார்த்தவன் அவள் தட்டைப் பார்த்தான்.

“என்ன சாப்பிடுறா இவ?” என்று யோசித்தவன் அந்த ஹோம்ஸ்டே ஊழியரிடம்

“சப்பாத்தி சன்னா இருக்கா” என்று கேட்க, அவர் சொன்ன உணவு வகையின் பெயரே புரியவில்லை. கடைசியில் சாதனாவின் தட்டில் உள்ளே காட்டி கேட்கவும் அவர் தட்டினைத் தர வாங்கி வந்து சாதனாவின் முன் உட்கார்ந்தான்.

“சது” என்று தயக்கத்துடன் அழைக்க, அவனைப் பார்த்த சாதனாவின் பார்வையில் அதிர்ச்சி. அவன் வருவான் என்று நினைக்கவே இல்லை. ஆனாலும்,  அவன் மீதான கோபம் அமைதியாக இருக்கச் சொன்னது.

error: Content is protected !!
Scroll to Top