இடைவெளி 10(1)

அடுத்த நாள் விடியல் ராமிற்கு மிகவும் அழகாய் விடிந்தது. அவன் கண்விழித்ததே அவன் காதல் மனைவியின் முகத்தில்தானே? சாதனாவுடன் ஒன்றாய் வாழ்ந்தபோதும், அவன் கண்விழிக்கும்போது சாதனாவின் முகம் பார்க்கையில் மனத்தில் ஒரு புத்துணர்வு தோன்றும்.

உறங்கி விழிக்கையில் விழிப்பாய், துணையாய் உன்னருகே நான் இருக்கிறேன் என்பது போல் இருக்கும் அவனுக்கு.

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இப்போது அப்படி ஒரு நாள். அதுவும் இத்தனை வருட பாரமெல்லாம் இறக்கி வைத்த, உள்ளமது தெள்ளமுதாய் தெளிந்து இருக்க, முழுமையாக அவளிடம் அவனைப் பற்றி சொல்லியபின் அகத்தில் ஒரு அளப்பரிய ஆசுவாசம்!

ராம் பார்வையால் மனைவியின் ரம்மியத்தை ரசித்திருக்க, அவள் விழித்தாள்.

பரசுராமைப் பார்த்தவள் சோர்வாக அவனருகே நெருங்கி அவனை அணைத்து மீண்டும் கண்மூடினாள்.

“என்ன டயர்டா இருக்கா?”

“தூக்கமா வருது” என்று தூக்கக் கலக்கத்தில் பேசினாள் சாதனா.

“இன்னும் மூணு நாள்ல நம்ம சென்னை போகணும் சது, இப்போ எழுந்தா கொஞ்சம் வெளியே போய்ட்டு வரலாம்” ராம் அழைக்க

“நீங்க ப்ரஸ்ட் ரெடியாகுங்க, நான் அரை மணி நேரம் தூங்குறேன்” என்று சாதனா சொல்லிவிட, ராம் குளித்துத் தயாராகி சாதனாவை எழுப்பினான்.

ப்ளாக் காங்க்ரா டீ மணக்க, அந்த வாசத்தில் சாதனா எழுந்து உட்கார்ந்தாள். முகம் கழுவி பல் துலக்கி வந்து கணவனைப் பார்த்த சாதனாவிற்கு சிரிப்பு வந்தது.

“என்ன சது சிரிக்கிற?”

“என்ன டிரஸ் இது?” விரல் நீட்டி அவன் சட்டையைப் பார்த்தாள்.

மனைவியைப் புரியாது பார்த்தவன் “இதுக்கு என்ன? நீட்டா இருக்குதானே?” என்று கேட்க

“இருக்கு இருக்கு! ஆனா இதை ஏன் இன்னிக்குப் போட்டிருக்கீங்க?” என்று மீண்டும் சிரித்தாள்.

“ராம், ராம்!” என்று காதலாய் கணவனை அழைத்து

“நீங்க ஒன்னும் கம்பெனி மீட்டீங் போல, ஹைக் போக போறோம்” என்று சாதனா சொல்ல, கண்களை சுருக்கி மனைவியைப் பார்த்த ராம்

“சுத்திப் பார்க்கத்தானே என்ன போட்டா என்ன சது? போட்டோவுக்கெல்லாம் நல்லா இருக்குமே” என்றதும் ராமை இழுத்து அணைத்த சாதனா அவன் இடையில் கைப்போட்டு முகம் தூக்கி அவன் முகம் பார்த்தாள்.

“மை லவ்லி ஹஸ்பண்ட்! நம்ம ஹைக் பண்ணலாம்னு நினைக்கிறேன் இன்னிக்கு. நம்ம ஒன்னும் சும்மா சுத்திப்பார்க்க வரல. கசோல் ரொம்ப அழகு, ஹைக் பண்ணினா நிறையா பார்க்கலாம். சோ ஒரு டீஷர்ட், ட்ராக், ஷூ போடுங்க. அதான் ஈசி இல்லைன்னா நடக்கக் கூட முடியாது”

“ஹே, எனக்கு money hike தான் தெரியும். mountain hikes லாம் பண்ணதில்ல” ராம் மறுத்தான்.

“எனக்காக வாங்க ராம், யூ வில் எஞ்சாய்!” என்று சொல்லி அவனை உடை மாற்ற வைத்த சாதனா டீயைப் பருகினாள். சாதனா ஒரு க்ராப் டாப், லெக்கீங் அணிய ராம் அவளை முறைத்தான்.

“என்னை வெறுப்பேத்த தானே இதை போடுற நீ?” என்று கடுப்பாக கேட்க சாதனா சிரித்தாள்.

“இதான் ஈசியா இருக்கும் ராம், மைசூர் சில்க் கட்டிட்டா மலையேற முடியும்?” என்று அவனிடம் கேட்க

“அதெல்லாம் கிடையாது, நீ என்னை பொசசிவ் என்ன வேணுமோ சொல்லிக்கோ. ப்ளீஸ் எனக்காக வேற டிரஸ் போடு சது. கொஞ்சம் பெரிய டீஷர்ட் போடேன்,  நீ சொன்னதும் நான் மாத்தினேன்ல” என்றான் ராம்.

“ஊர்ல நான் ஃபார்மலா தானே டிரஸ் பண்றேன். அங்க நான் நினைச்சா கூட அப்படி பண்ண முடியாது. இதெல்லாம் நான் காலேஜ் டேய்ஸ்ல போட்டது, ஹைக்கிங்கு சுடியெல்லாம் செட் ஆகாது” என்று சாதனா விளக்கினாள்.

சாதனா விளக்கம் சொல்ல, ராமிற்கு அவன் செய்வது அதிகம் என்று தோன்றியது. சாதனா இப்படி அவளை விளக்குவது அவள் குற்றம் செய்தது போல் காட்ட,

“க்யூட்டா இருக்க சது, கூடவே ஹாட்டா அதான்” என்று ராம் குறும்பாகக் கண்ணடித்தவன்

“என்ன ஹிந்திக்காரனெல்லாம் உன்னை சைட் அடிப்பான், அதான் கடுப்பா இருக்கும்”

“அப்போ தமிழ்க்காரன் சைட் அடிச்ச ஓகேவா?” என்று கேட்க ராம் முறைத்தான்.

“இங்க என்னை விட எல்லோரும் சூப்பரா இருப்பாங்க, உங்களுக்கு நாந்தான் சூப்பர் ஃபிகரா தெரியறேன் போல. இன்னிக்கு ஹைக்’ல பாருங்க எல்லோரும் எப்படி ஃபிட் அண்ட் அழகா இருக்காங்கனு.”

“சரி சரி, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதையே போட்டுக்கோ சது” என்று ராம் ஒத்துக்கொண்டான்.

“அப்படியா? அப்புறம் அங்க வந்து ஷால் போடு சொல்லக்கூடாது! இடுப்பைப் பிடிக்கக் கூடாது” என்று சாதனா கண்டிஷன் போட

“ஆப்ஷன் ஒன்னு ஒகே, இரண்டெல்லாம் முடியாது. நம்ம ஹனிமூன் ட்ரிப் இது” ராம் ஆர்வமாக சொன்னதும் சாதனா

“உங்க டிரஸ் பார்த்தே தெரிஞ்சது ஹனிமூன் டிரிப்” என்று கிண்டலடித்தாள்.

“அதான் மாத்திட்டேன்ல” என்றதும் இருவரும் அந்த ரிசார்ட்டில் காலை உணவை முடித்து மலையேற்றம் சென்றனர்.

காலை  நேர பரபரப்பு இன்னும் அந்த மலை ப்ரதேசத்தில் துவங்கவில்லை. பனி அடர்ந்த காற்று ஈரமாய் தேகம் தழுவிச் சென்றது. ராமும் சதுவும் அவர்கள் தங்கியிருந்த ரிசார்ட்டிலிருந்து  நடந்தே சென்றனர்.

நடக்கும்போது சாதனாவின் கையைப் பிடித்தே நடந்தான் ராம். அவன் எப்போதும் சிரித்த முகம், இன்றும் இன்னும் கூடுதல் சிரிப்பு. அதுவும் அவன் புன்னகை இதழில் இட்டு நிரப்பியதாக மட்டுமில்லாது விழிகளில் விரவி ஜீவனுடன் இருந்தது.

வெகு தூரம் நடந்த பின், ஒரு காட்டுப்பாதை வர அதற்குள் ராம் களைத்துவிட்டான்.

“ஹேய் சது, என்ன இது? எவ்வளவு நேரம்?” என்று கேட்க,

“இன்னும் கொஞ்ச தூரம் போனாதானே நல்ல சைட் கிடைக்கும்” சாதனா நெற்றியில் வழிந்த வியர்வையைத் துடைத்தபடி சொன்னாள்.

ராம் அவன் கைக்குட்டை வைத்து அவள் நெற்றியைத் துடைத்தவன் “எனக்கு நீதான் பெஸ்ட் சைட்!” என்றான் காதலை கண்ணுக்குள் தேக்கி வைத்து.

“ப்பாஅ!!!!!!!!!!! ராம்! ஐ அம் ஆல்ரெடி இம்ப்ரெஸ்ட். இதெல்லாம் கல்யாணம் முன்னாடி ட்ரை பண்ணியிருக்கலாம். இப்ப தேவையே இல்லை” என்றதும்

“நான் நிஜத்தைத்தான் சொல்றேன், இம்ப்ரஸ் பண்ணனும்னு எல்லாம் சொல்லல” என்று பெருமூச்சுவிட்டவன் அங்கிருந்த சிறிய பாறையில் உட்கார்ந்தான்.

“இந்த இடமே அழகா இருக்கே சது, இன்னும் என்ன அழகா நீ பார்க்கனும்?” என்று சுற்றியிருந்த பச்சை நிறத்தில் நிறைந்த மரங்களைக் காட்டிக் கேட்டான் ராம்.

“வாங்க,  நான் காட்டுறேன்” என்றவள் அவன் கையோடு கைகோர்த்தபடி ஒரு பாதையில் அழைத்துப்போனாள்.  நடக்க நடக்க, அதுவொரு காட்டுப்பாதை, எங்கோ ஒரு நதியின் சத்தம் கேட்டது.

“இங்க நான் முன்னாடி வந்திருக்கேன், சூப்பரா இருக்கும் ராம்” என்று அவனுடன் பேசியபடி ஒரு இடம் வந்தாள் சாதனா.

சுற்றிலும் மரங்கள் இருக்க, ஒரு பெரிய மரம் வேரோடு சரிந்து நதியின் மேல் பாலமாக இருந்தது. அருகே சின்ன சின்ன பாறைகள், கூழாங்கற்கள். மேகம் மலையைத் தொட்டுச் சென்றது. வியர்த்தாலும் காற்றில் ஈரம் இருந்தது.

சீக்கிரமே எழுந்து வந்ததால், நிறைய கூட்டமில்லை. அதையும் விட அந்த பகுதி தனித்திருந்தது. சாதனா மெல்ல அந்த மரத்தின் மீது ஏறப்போக, ராம் அவள் கையைப் பிடித்தான்.

“இங்க இருந்தே பார்க்கலாமே சது, ஏன் அது மேல ஏறுற, வழுக்கி விழுந்துட்டா கீழ பாரு, தண்ணீப்போகுது, பாறையா இருக்கு” என்று தண்ணீரில் மூழ்கியிருந்த பாறைகளைக் காட்டினான். அந்த தண்ணீர் அத்தனை பரிசுத்தமாய் இருந்தது.

“வாங்க ராம்!” என்று அவனை இழுத்ததில் சாதனாவின் கையை இறுகப்பற்றினான்.

“என்னை இளைக்க வைக்காம விடமாட்ட நீ?” என்று திட்டியவன் மனைவியின் கையைப் பிடித்து, அவளுடன் நடந்தான். புதிய அனுபவம் அந்த வேளையில், அழகிய காலையில்!

மேகங்கள் நெடிய மரங்களை உரசிச் செல்ல, சுற்றிலும் பசுமை!! கீழே நீர் வரத்து இருக்க, ஜில்லென்ற உணர்வு. நீர் சலசலவென ஓடும் இசை சத்தமான சங்கீதமாகக் கேட்டது.

“பார்த்தீங்களா தண்ணீ எப்படி க்ளீயரா இருக்குன்னு” என்று கீழே ஓடிய   நீரை  உற்சாகமாய் சுட்டிக்காட்டினாள். சாதனாவுடன் சரிந்தபடி அந்த மரத்தில் ஆன பாலத்தில் உட்கார்ந்தான் ராம்.

“மகாபலிபுரத்தில  மலையேறினா டயர்ட் ஆகிடுவேன்னு கடல்ல காலை நனைச்சவன் நான், என்னை நீ இவ்வளவு தூரம் நடக்க விட்டு இந்த மலையேறி மரம் மேல உட்கார வைக்க என் எனர்ஜியெல்லாம் போச்சு” என்று சொல்லி மனைவியின் தோளில் சாய்ந்தான். இருவரின் கால்களும் காற்றோடு உரசி செல்லும் வகையில் உட்கார்ந்திருந்தனர்.

error: Content is protected !!
Scroll to Top